திராவிட மாயை! தெரிகிறதா? புரிகிறதா?

திராவிட மாயை என்றால் என்ன? புரிந்துகொள்வது வெகு எளிது!
இலங்கை கடற்படையினரால் #மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் எல்லா காலத்திலும் நடந்துதான் இருக்கிறது. 'சில பேராசை கொண்ட மீனவ மக்கள் கடல் எல்லையை தாண்டி செல்லும்போது உயிரை இழக்கும் நிலை ஏற்படுகிறது- முன்னாள் முதல்வர் #கருணாநிதி₹#.

இப்படி முகநூலில் படம்போட்டு விளக்கியிருக்கிறார் சுரேஷ் குமார் ராஜபாண்டியன்! அதை இலக்கண சுத்தமாக விவரிப்பதென்றால், வசதிப்படுகிற ஓரிரு இடங்களில் மட்டும் உண்மையையும், மீதிநேரங்களில் பொய்புனை சுருட்டையும் அள்ளிவிடுகிற கலைக்குப் பெயர் திராவிடம்,  திராவிடமாயை!  

Narain Rajagopalan ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதாக உணர்கிறார்.1 மணி நேரம்
தமிழ்நாட்டில் ஒரு எம்.பி தொகுதி = 6 எம்.எல்.ஏ தொகுதி.
2014-இல் தர்மபுரி, கன்னியாகுமரி தவிர்த்து அவ்விரு கட்சிகளும் சட்டமன்ற தொகுதிகளை வெல்லவில்லை. மற்ற கட்சிகளின் நிலைமை அதை விட பரிதாபம். 1% கீழே ஓட்டு வாங்கிய, எங்கே நின்றாலும் டெபாசிட்டை கூட வாங்க முடியாத கட்சிகள் தான் இங்கே ஏராளம்.
2014 to 2016 to 2019ல் குறைந்த பட்சம் அதிகாரத்தினை கைப்பற்றிய கட்சிகள் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, முஸ்லீம் லீக் மட்டுமே. கருணாஸ், தனியரசு, தமிமூன் அன்சாரி கதைகள் தனி.
ஆனால், இரண்டு கூட்டணியிலும், வலுக்கட்டாயமாக முரண்டு பிடித்து, சீட் வாங்கி இருக்கும் பெரும்பாலான கட்சிகள் ஒரே ஒரு சட்டமன்ற தொகுதி கூட சமீபத்தில் வென்று இருக்கவில்லை என்பதும், மொத்தமாய் கூட்டினாலும் 10% மேல் இரண்டு பக்கங்களின் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கி தேறாது என்பதும் தான் ஆகப் பெரிய நகைமுரண். மக்கள் நிராகரித்த, ஒரங்கட்டிய, கண்டு கொள்ளாத ஆட்களை எல்லாம் இரண்டு அணிகளும் தத்தமது தேவைகளுக்கு ஏற்ப திரட்டி, வலிமை காட்டுகின்றன. இது இரண்டு விதமான செய்திகளை சொல்கிறது.
1 ) திமுகவோ, அதிமுகவோ அடிக்கிற பேரலையில் கூட சேர்ந்து ஒட்டிக் கொண்டால், தாங்களும் கரை சேரலாம் என்று சிறிய கட்சிகள் நினைக்கலாம்.
2 ) திராவிட அரசியல் கட்சிகளுக்கோ, தங்கள் இருவருக்குமான வேறுபாடு என்பது 2016-இல் 1% என்பதும், அந்த ஒரு விழுக்காடு இந்த மாதிரி சிறிய கட்சிகளின் வழியாக வந்தால் கோலோச்சலாம் என்று நினைக்கலாம்.
கூட்டணி கணக்குகள், பேரங்கள், இலாப நட்டங்கள், குழிப் பறித்தல், ஒரங்கட்டல், வேலை செய்யாமல் இருத்தல், மாற்றி குத்துதல் என சகல செளபாக்கியங்களோடும் அணிகள் திரண்டு கொண்டு இருக்கின்றன.
மக்கள், தாங்கள் நிராகரித்தவர்கள் எல்லோரையும், எந்தெந்த அணியில் யார் யார், யார் யாரை வசை பாடினார்கள் என்பதையும், மேடையில் வாய் மணக்க பேசினாலும், களத்தில் எதிர் எதிராக நிற்கும் கட்சிகள் என்பதையும் வழக்கம் போல பார்த்துக் கொண்டு உள்ளுக்குள்ளேயே தங்களுக்கான கணக்கினைப் போட்டுக் கொண்டு, நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு, தங்களுடைய வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய வாக்காளனை எடை போடுவது அவ்வளவு எளிதல்ல.
PS: உடனே நண்பர் அப்துல்லா எழுதிய நினைவோடையான கலைஞர் “கம்யூனிஸ்டுகள் இல்லாத சட்டமன்றம்” என்று கலங்கினார் என்பதை தூக்கிக் கொண்டு வராதீர்கள். மக்களுடைய நிராகரிப்பினை எந்த மட்டையடியினை கொண்டும் ஜஸ்டிஃபை செய்ய முடியாது. மக்கள் தான் எஜமானர்கள், அவர்கள் சொல்கிற தீர்ப்பு தான் இறுதியானது.    

இதை எழுதியிருப்பவர் திமு கழக ஆதரவாளர் அல்லது முழுக்க நனைந்த உபி! எதுவென்று எனக்குத்தெரியாது! தெரிந்துகொள்ள விருப்பமுமில்லை.

முழுக்க நனைந்த உபியோ. முக்காடு உபியோ, பல  சமயங்களில் திராவிட மாயை விலகி கள யதார்த்தம் புரியவருகிறபோது, இப்படியும் வரும்! நிலைக்காது என்பது அரசியலில் நான் பார்த்துக் கொண்டிருக்கிற ஆகப்பெரிய பரிதாபம்!
      


காங்கிரஸ், கழகங்களின் கலாசாரம் பிஜேபிக்கும் கொஞ்சம் தொற்றிக்கொண்டு வருகிறதோ?  

கொஞ்சம் கவலையோடு இந்த அரசியல் அநாகரீகங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.



2 comments:

  1. முகநூல் முழுக்க சுழன்று வருவீர்கள் போலிருக்கே?

    ReplyDelete
    Replies
    1. முதுதும் சுற்றுகிற அளவுக்கு நேரமோ பொறுமையோ இல்லை ஜோதிஜி! கண்ணில் படுகிற ஒரு சில விஷயங்களே தலைசுற்ற வைக்கிறது!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!