இட்லி வடை பொங்கல்! #25 மன்னிப்பு! அரசியல்! காமெடிகள்!

இங்கே சிலகாலத்துக்கு முன் திமுக தலீவர் இசுடாலின் கட்சித் தொண்டர்கள் செய்த பஜ்ஜிக் கடையில், பிரியாணிக்கடையில்,  சாப்பிட்டுவிட்டுக் காசுதராமல் அடிதடி அராஜகத்தில் இறங்கிய செய்தி அம்பலமானதும், வரிசையாக மன்னிப்புக் கேட்ட கதை நினைவிருக்கிறதா? இப்போது கூட்டணி தர்மத்தில் ராகுல் காண்டி முறை போல இருக்கிறது! 


1984 (சீக்கியர் படுகொலை) நடந்தது, அதனால் என்ன என்று அலட்சியமாக ராஜீவ் காண்டியின் நண்பரும் ராகுல் காண்டிக்கு வழிகாட்டியும் ஆன  சாம் பிட்ரோடா பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியதில், ராகுல் காண்டி அந்தப் பேச்சைக் கண்டித்திருக்கிறார், மன்னிப்புக் கேட்கவும் சொல்லியிருக்கிறார் என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே நிகழக்கூடிய அரசியல் வினோதம்! மன்னிப்புக் கேட்பது! பிரதமராக இருந்த நாட்களில் கனடாவுக்குப்போனார் மன்மோகன் சிங்! 1984 வன்முறைக்குப் பிறகு சீக்கிய சமூகம் பெருமளவில் கனடாவில் குடியேறியிருந்தது. அவர்களை சமாதானப்படுத்த அந்நியமண்ணில் மன்னிப்புக் கேட்டார் மன்மோகன் சிங்! ஆனால் காங்கிரஸ் உண்மையிலேயே நடந்த தவறுக்காக  வருந்தியதா? குற்றவாளிகளைக் குறைந்த பட்சமாகக் கட்சியிலிருந்தாவது            நீக்கியதா என்றால் இல்லை! நேரடியாகக் களத்தில் இறங்கி சீக்கியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்திய கமல்நாத் இன்று மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முதலமைச்சர்! 


இந்த விவாதத்தில் ஒரே ஒரு தகவல் பிழை, பிஜேபியின் நாராயணன் குறிப்பிடுவது போல, அந்த நாட்களில் ராஜீவ் காண்டி INS virat இல் உல்லாசப்பி பயணம் போனதைக் கார்டூனாக வரைந்தது R K நாராயணன் அல்ல, அவரது சகோதரர் RK லட்சுமண்! காங்கிரஸ் விரும்பாவிட்டாலும் கூட சீக்கியர் வாக்கு அதிகமாக உள்ள கடைசி 2 கட்டத் தேர்தல்களில் ராஜீவ் காண்டியின் பிரதாபங்கள் கவனத்தை ஈர்க்கிற விஷயமாக ஆகிப்போனது, ராகுலும் பிரியங்காவும் தாங்களே இழுத்துவிட்டுக் கொண்டதென்பது தாமதமாகத்தான் புரியவந்திருக்கிறது! மன்னிக்க வேண்டுகிறேன் என்று வாயால் சொன்னால் தீர்ந்து விடுமா? 

முகநூலில் R நாராயணன் இன்றைய சூழ்நிலையில் நம்மூர் அரசியல்வாதிகள் நேயர் விருப்பமாக என்ன பாடலை விரும்பிக் கேட்டிருப்பார்கள் என்று சிச்சுவேஷனைக் கற்பனை செய்து பார்த்திருக்கிறார்! அவருக்கு வாட்சப்பில் வந்ததாம்! காமெடிப்  பகுதியாக இங்கே அது 

😀😀😀 *இன்றைய நேயர் விருப்பம்.யார் யார்க்கு என்ன என்ன பாட்டு வேணும்.*
*ஸ்டாலின்  காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி....
*டிடிவி தினகரன்  சட்டி சுட்டதடா கைவிட்டதடா புத்தி கெட்டதடா
*திருநாவுக்கரசு  கனவு கானும் வாழ்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
*தமிழிசை  எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே
*கமல்  கொட்டும் மழைக்காலம் உப்பு விற்க போனேன், காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்
*ரஜினி  ராஜா என்பார் மந்திரி என்பார் ஒரு ராஜ்ஜியம் இல்லை ஆள
*எடப்பாடி  சொல்லி அடிப்பேனடி அடிச்சதுன்னா நெற்றி அடி தானடி
*கருணாநிதி  ஆடியடங்கும் வாழ்கையடா ஆறடி நிலமே சொந்தமடா
*வைகோ  நானொரு ராசியில்லா ராஜா
*கனிமொழி  ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
*சீமான்  நானொரு முட்டாளுங்க, ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
*திருமாவளவன்  உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
*அன்புமணி  ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே
*ஜி கே வாசன்  நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்து பார்த்தால் எல்லாம் பொம்மை
*மக்கள்  யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க....
இத்துடன் இன்றைய நேயர் விருப்பம் முடிகிறது.😀😀😀
வாட்சப். 
       

3 comments:

 1. நேரடியாகக் களத்தில் இறங்கி தாக்குதல் நடத்தியது ராஜேஷ் பைலட் இல்லை? மன்னிப்புக் கேட்கும் சீசனில் ஜாலியன் வாலாபாக்கையும் சேர்த்துக் கொள்ளலாம்!

  நேயர் விருப்பம் பாடல் செலெக்ஷன் சூப்பர்!

  ReplyDelete
  Replies

  1. பைலட், சஜ்ஜன் குமார், கமல் நாத் என்று களத்தில் இறங்கி சீக்கியர்களை படுகொலை செய்த காங்கிரஸ்காரர்களுடைய பட்டியல் கொஞ்சம் பெரிது ஸ்ரீராம்!

   நேயர் விருப்பம் வாட்சப்பில் வந்ததாம்!

   Delete
  2. ஜாலியன் வாலாபாக்! நூறாண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ்காரர்கள் நடத்திய படுகொலை. குண்டுகள் தீரும்வரை சுட்டேன் என்று பெருமிதமாகச் சொன்னான் டயர் என்கிற பிரிட்டிஷ் தளபதி. அதற்கு மிகச் சமீபத்தில் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே பகிரங்க மன்னிப்பைத் தெரிவித்தார்.

   இங்கே காங்கிரஸ் காரனுக்கு செய்த தவறை ஒப்புக்கொள்ளவோ மன்னிப்புக் கேட்கவோ திராணி கிடையாது. அவ்வளவு திமிர்!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!