இந்தத் தேர்தல் கூத்துகளின் பொதுவான அம்சம்!

இந்தத் தேர்தல் கூத்துகளின் பின்னணியில் பொதுவான அம்சம் என்னவாக இருக்கும், இருந்ததென்று கொஞ்சம் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் நரேந்திர மோடி என்கிற ஒரு மனிதர்,  தங்கள் இருப்புக்கே முடிவு கட்டிவிடுவார் என்ற பயத்திலேயே, மோடி எதிர்ப்பு, மோடி வெறுப்பு என்கிற புள்ளியில் ஒற்றை அஜெண்டாவோடு சந்தித்த தேர்தல் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். 2014 இல் சோனியா மட்டும் தான் மரண வியாபாரி என்று வெறுப்பை உமிழ்ந்து தன்னுடைய பிரசாரத்தை நடத்தினார். சோனியாவுக்கு இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நிறையக்  கூட்டாளிகள் சேர்ந்திருக்கிறார்கள் என்பது 2019 தேர்தல்களின் சிறப்பு.  


  • Bhopal: Police personnel in civil uniform seen wearing saffron scarves at the roadshow of Computer Baba and Digvijay Singh (Congress candidate from the Lok Sabha seat); a policewoman says "we've been made to wear this". #MadhyaPradesh
    10:24 AM · May 8, 2019 · Twitter Web Client
    #டிக்கிசிங் என்று செல்லமாக அழைக்கப் படுகிற திக்விஜய் சிங் எந்த அளவுக்குப் பயந்துபோயிருக்கிறார், மத்தியப் பிரகேசத்தில் மாநில அரசை சென்ற டிசம்பரில் பிடித்த விஷயம் கொஞ்சநாளைக்கு பப்ளிசிடிக்கு உதவியதே தவிர காங்கிரஸ் அங்கே காலூன்றும் என்பதற்கான அடையாளமாக ஆகிவிடவில்லை என்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்தச் செய்தி கூட்டத்துக்கு மஃப்டி போலீஸ், அதுவும் காவித்துண்டைக் கழுத்தில் சுற்றியபடி, என்னவோ காவிகள் எல்லாம் காங்கிரசுக்கு மாறிவிட்ட மாதிரி ஒரு பொய்த்தோற்றம்! பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு காங்கிரஸ் ஆட்சியைப்பிடித்த மூன்று மாநிலங்களிலும் செய்வதறியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறதென்பது வருமானவரிச் சோதனைகளில் அம்பலமான விஷயம்.
    இங்கே திமுக ஆதரவு ஊடகங்கள் என்னமோ இப்போதே திமுக ஆட்சியைப் பிடித்து விட்ட மாதிரி, இசுடாலின் கிரீடம் சூட்டிக்கொள்கிற நாள், இடமெல்லாம் குறித்துக் கொண்டு செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கும் அதே நேரம்,
    வருகிற 19 ஆம் தேதி நடக்கவிருக்கிற 4 தொகுதி இடைத் தேர்தல்களுக்கும் தொகுதிக்கு 50 வழக்கறிஞர்கள் வீதம் 200 வழக்கறிஞர்களைக் களம் இறக்கியிருப்பதாகவும் அதே ஊடகங்களில் செய்தி வருகிறது. பாருங்கள், தமிழிசை கூட நக்கலடிக்கிற அளவுக்குத் திமுக ஆதரவுத்தம்பட்டங்கள் கொண்டு போய் விட்டிருக்கிறது. எகோசஇ என்று யாரும் கேட்க மாட்டீர்களா? 


    தமிழிசையை ரொம்பநாட்களாகக் கண்டு கொள்ளவே இல்லை என்று யாரும் விரல்நீட்டிக் குற்றம் சொல்லிவிடக் கூடாது இல்லையா?

    எப்போ பார்த்தாலும் சும்மாசும்மா அரசியல்வாதிங்களையே குத்தம் சொல்லிக்கினு என்று அலுத்துக் கொள்கிறீர்களா?


    மீண்டும் சந்திப்போம்.

    4 comments:

    1. கடைசியில் போட்டிருக்கும் படம் அர்த்தமுள்ளது. நாம், நம்மைத் தவிர மற்ற எல்லோரும் யோக்கியர்களாக இருக்கணும்னு நினைக்கிறோம். நாம் மட்டும் எந்தச் சட்டத்தையும் மதிக்கமாட்டோம், நேர்மையாக நடந்துகொள்ள மாட்டோம், மற்றவர்கள் செய்யவேணும் என்று எதிர்பார்க்கும் எதையும் செய்யமாட்டோம் என்பதே பெரும்பாலான தமிழர்களின் அஜெண்டாவாக இருக்கிறது.

      இன்றைக்கு சாலையில், மார்க் பண்ணியிருக்கும் இடத்தைத் தாண்டி, சிக்னலில் ஏகப்பட்ட வண்டிகள், ரெடியாக 'பச்சை' வந்தவுடன் அல்லது அதற்கு முன்பாகவே பறக்கத் தயாராக இருக்கின்றன. பொதுமக்கள் சாலையைக் கடக்கவேண்டுமே, வெள்ளைக்கோட்டுக்குப் பின்னால்தானே நிற்கணும் என்ற சாதாரண அறிவுகூட இல்லாத மக்கள். இவங்க தனிப்பட்ட முறைல, யார் முதல்வராகணும், எந்த எந்த அரசியல்வாதிகள் மோசம் என்றெல்லாம் நீட்டி முழக்கிப் பேசக்கூடிய பதர்கள் என்று எனக்குத் தோன்றியது.

      ReplyDelete
      Replies
      1. நாம் ஒவ்வொருவருமே வெட்கித்தலைகுனியவேண்டிய அளவில்தான் தமிழேண்டா பொதுப்புத்தி இருக்கிறது! :(((

        Delete
      2. தமிழர்கள் குறித்து சொல்றீங்க. வட இந்தியர்கள் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது, முன் பதிவு செய்து இருந்தாலும் ஆக்ரமிப்பு செய்து கொள்வது, பொது இடங்களில் புளிச் புளிச் என்று துப்புவது இது போல பல விசயங்களில் இருக்கீன்றார்களே அவர்களை ஒப்பிடும் போது நம்மவர்கள் பரவாயில்லை தானே?

        Delete
      3. ஜோதி ஜி! உங்கள் கேள்வியில் உள்ள லாஜிக் சரிதானா என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!

        ஆக்கிரமிப்பு, அசுத்தம் எல்லாம் இங்கேயும் உண்டு. ஆனால் படத்தில் பட்டியலிட்டுச் சொல்லியிருப்பது எல்லாம் நம்மவரை தவிர வேறிடத்தில் உண்டா?

        Delete

    ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!