2 கார்டூன்! ஒரு குட்டிக்கதை பின்னே கருத்துக் கணிப்பு!

கேரள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காண்டி போட்டியிடுகிறார் என்கிற ஒரேவிஷயம் காங்கிரஸ்கட்சி தென்மாநிலங்களில் இழந்த செல்வாக்கை மீட்டுக் கொடுக்கும் என்று காங்கிரஸ் கட்சி உண்மையிலேயே நினைக்கிறதா என்ன?  அர்த்தமில்லாத தேர்தல் அறிக்கை, வாக்குறுதிகளில் வாக்காளர்களை அப்படியே ஈர்த்துவிட முடியும் என்று நம்புகிறதா?


The Hindu நாளிதழில்  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக அரசியல்துறைப் பேராசிரியர் ஜோயா ஹசன் A very risky gamble in Wayanad என்ற தலைப்பில் சொல்லியிருக்கிற விஷயங்களில், காங்கிரஸ் கவலைப் படவேண்டிய விஷயங்கள் எதுவுமில்லை.மாறாக இந்திய இடதுசாரி இயக்கம் எப்படித் தேய்ந்து கொண்டே வருகிறது என்பதன் வெளிப்பாடாகத் தான் பார்க்க முடிகிறது.


கேசவ் வரைந்த இந்த கார்டூனைப் பார்த்தபோது நேற்றோ முதல்நாளோ பார்த்த படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வந்தது. வேறு யார்? எங்கள் Blog இன் K G கௌதமன் சார் முகநூலில் பகிர்ந்து தான்! கதை என் வார்த்தைகளில்.    

ஒரு ஆசாமி அவசர அவசரமாக ஓடிக் கொண்டிருந்தான்! பரிதாபப் பட்டு ஒரு மனிதர் இதமாக ஏனப்பா இப்படிப் பதறி ஓடுகிறாய் என்று வினவினார். அதற்கு அந்த முதல் ஆசாமி என்னை மூன்று தலைமுறையாக விடாமல்  துரத்திக் கொண்டே வருகிறார்கள் என்றானாம். ஆச்சரியமடைந்த மனிதர்  யாரப்பா அப்படி மூன்று தலைமுறைகளாகத் துரத்திக் கொண்டிருப்பது என்று கேட்கிறார். முதல் ஆசாமி அவரைப் பரிதாபமாகப்பார்த்து விட்டு முதலில் பாட்டி இந்திரா அப்புறம் மகன் ராஜீவ் கொஞ்சம் இடைவெளி விட்டு இப்போது பேரன் ராகுல் காண்டியும் என்னை ஒழித்துவிடுவதாகச் சபதம் போட்டுத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றானாம்!

உன் பெயரென்ன? என்று கேட்டதற்கு இன்னுமா தெரியவில்லை? கரீபி (வறுமை) என்ற பதில் வந்தது. 

தேர்தல் காமெடிகளில் தவறாமல் இடம் பிடிப்பது லயோலா கல்லூரி கருத்துக் கணிப்புகள் தான்! சாயம் வெளுத்தபிறகும் கூட விடாமல் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் என்ற போர்வையில் வந்து கொண்டிருப்பது இன்னும் காணோமே என்று பார்த்தேன்! இதோ! வந்துவிட்டார்கள். இந்து நாளிதழை விட்டால் வேறு யார் பொருத்தமாகப் promote செய்து விட முடியுமாம்?

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தல் ஆகியவைக்கான லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கருத்து கணிப்பு வெளியீடு | வீடியோ: ஜெய்
        
லயோலா என்றால் நம்பகத்தன்மையற்றது என்ற புது அர்த்தத்தை இப்படிக் கருத்துத் திரித்தல்களில் சொல்லி வருகிறார்களோ? கிறித்தவம் ஆதிநாட்களிலிருந்தே அந்தமாதிரிக் கருத்துத் திணிப்பைத்தான் தன்பணியாக செய்துவருகிறது என்பது ஏற்கெனெவே தெரிந்த விஷயமாக இருப்பதால், இதைக் குறித்து ஆச்சரியமோ பொருட்படுத்துகிற எண்ணமோ எழவில்லை!

மீண்டும் சந்திப்போம்!
       

4 comments:

 1. கருத்துக்கணிப்புகள் நம்பகத்தன்மை உடையதா? வாச்சிக்கறதுதான் அமைஞ்சுக்கறதுதான் போலதான்!

  ReplyDelete
  Replies
  1. இல்லை ஸ்ரீராம்! Psephology என்கிற வாக்காளர் மனநிலையைக் கணிப்பதில் சரியான முறையைக் கடைப்பிடித்தால் துல்லியமான ரிசல்ட் இருக்கும் விஞ்ஞானபூர்வமான துரி இது. பிரணாய் ராய் India Today வார இதழுக்காக தொடக்கநாட்களில் நடத்திய கருத்துக்கணிப்புக்களின் துல்லியமே இன்றைய NDTV உருவானதற்கு மூலகாரணம் என்றால் நம்புவதற்கு கடினமாக இருக்கும்.

   துல்லியமான ரிசல்ட்டுக்கு சாம்பிள் சைசும் அடிப்படைக் கேள்விகளும் மிக முக்கியம். பதில்சொல்பவர் உண்மையைத்தான் சொல்கிறாரா என்பதை verify/crosscheck செய்துகொள்ள துணைக்கேள்விகளும் அவசியம். எதெல்லாம் கழிக்கப்பட /கணக்கில் கொள்ளவேண்டியவை என்பது சேகரிக்கப்பட்ட தகவல்களை collate செய்யும்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள். புள்ளிவிவரங்கள் தன்னளவில் பொய்யெதுவும் சொல்வதில்லை. அதை பயன்படுத்துகிற வித்தைக்காரன் நாணயமானவனா அல்லது விலைபோனவனா என்பது ஒரே புள்ளிவிவரத்தை இரண்டுவிதமாகவும் பயன்படுத்துகிறபோது எழுகிற இயல்பான சந்தேகம்.

   Delete
 2. கரீபி கதை - :) ஆனால் வருத்தம் தரும் உண்மைக் கதை!

  ReplyDelete
  Replies
  1. கதை ஒரிஜினலாக கேஜி கௌதமனுடைய முகநூல் பக்கத்தில் பார்த்தது. அரசியல்வாதிகள் ஒழிப்பதாகச் சொன்ன எதை ஒழித்திருக்கிறார்கள்? வருத்தப்படவேண்டியது இன்னமும் ஜனங்கள் இப்படிப்போலிகளை நம்புகிறார்களே என்பது ஒன்றுக்காகத்தான்!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!