தினமலர்! ரங்கராஜ் பாண்டே! மல்லு சனம்!

தினமலருக்கு  ஒரு ராசி! தினமலம் என்பார்கள் வாங்க மாட்டோம் என்பார்கள்! ஆனால்  ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு நல்ல விளம்பரமும் தேடித்தருவார்கள்! இத்தனை நாட்கள் தினமலர் செய்திகளைத் தேடிப் படிக்காமல் இருந்த என்னையும் கூட என்னவென்று திரும்பிப்பார்க்கவைத்ததில் (நம்புங்க சாமி! திட்டுவது என்றால் கூட இந்து தமிழ்திசைப்பக்கம் தான் போகிற வழக்கமுள்ளவன் நான்!)  இணைய வசையாளர்கள் பங்கு மிகப் பெரியது! ஓ....சேசப்பா என்று செய்திக்குத் தலைப்புக் கொடுத்ததற்குக் கொதித்தார்கள்! Sports செய்திகளில் கூட அடுத்தடுத்து வெளியிடப்பட்டிருந்த செய்திகளுக்கும் கொதித்தார்கள்!  அவர்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஸ்க்ரீன் ஷாட்!


இதே நண்பர்கள் மோடி ஒழிக என்றும் குரல் கொடுத்தார்கள்! தாமரை இங்கே மலரவே மலராது என்றும் சூளுரைத்தார்கள்! வெறுப்பரசியலை உச்சத்துக்கே கொண்டு போனார்கள்! அதனால்  என்ன ஆகுமென்று நினைக்கிறீர்கள்?  
        

குறுகிய தேர்தல் ஆதாயத்துக்காக எத்தனை  பொய்களை வேண்டுமானாலும் பேசலாம்! நீதிமன்ற அவமதிப்போ வம்பு வழக்குகளோ வந்தால் தான் என்ன? #வழக்கறிஞர்அணி எதற்காக இருக்கிறது என்ற மிதப்பில் காங்கிரஸ்தலீவர் ராகுல் காண்டி இருப்பதாகத் தெரிகிறது. கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா கூட அப்படித்தான் நினைக்கிறார்போல!
     

இன்னாது இது? பரட்டை  படம் எதுவும் ரிலீசுக்குத் தயாராக இருக்கிற மாதிரித் தெரியலையே!?


ரங்கராஜ் பாண்டே என்னமோ சொல்கிறார்! உப்பிட்ட தமிழ்நாட்டுக்கு ரஜனி செய்யக் கூடிய ஒரே உபகாரம் குட்டையைக் குழப்பாமல் இருப்பது ஒன்று மட்டும்தான்! ஆணியே புடுங்க வேணாம் சாமீ! 


The Week ஒரு காலத்தில் அச்சுப் பத்திரிகையாக வாசித்துக் கொண்டிருந்த வார இதழ்! கேரளாவில் நேற்று நடந்து முடிந்த தேர்தல்களைப் பற்றி மல்லு ஊடகங்கள் என்னதான் சொல்கிறார்கள் என்று பார்க்கப் போனால் ஓவராகப் பீலா விடுகிறார்கள்!

The “fear factor” that the minority communities, especially Muslims, share against the BJP government is, indeed, considered to be a key factor that contributed to the huge turn out. Most observors say this is evident in the heavy polling in all constituencies in Malabar and also in coastal belts where the community has a stronger presence என்கிறார்களே, பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு நெடுங்காலம் முன்னதாகவே, இல்லாத  இந்த அச்சம் ஒன்றை மூலதனமாக வைத்துத் தானே காங்கிரஸ் உள்ளிட்ட pseudo secular கட்சிகள் அத்தனையும் ஜனங்களை பெரும்பான்மைக்கெதிரானவையாக சிறுபான்மையினரைப்   பிரித்தே வைத்திருந்தார்கள்? 
For example, two Muslim-dominated constituencies in Malabar—Ponnani and Malappuram—where the IUML is contesting, had lower turn out when compared to other constituencies. Similarly, Muslim-dominated assembly segments in Rahul's Wayanad constituency also recorded a comparatively lower turn out என்று சொல்லியிருப்பதை மட்டும்  கவனத்தில் எடுத்துக் கொண்டேன்.  

மீண்டும் சந்திப்போம்!        

2 comments:

  1. அந்த வார்த்தை ஜாலங்களை (கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா) மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. //பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு நெடுங்காலம் முன்னதாகவே, இல்லாத இந்த அச்சம் ஒன்றை மூலதனமாக வைத்துத் தானே காங்கிரஸ் உள்ளிட்ட pseudo secular கட்சிகள் அத்தனையும் ஜனங்களை பெரும்பான்மைக்கெதிரானவையாக சிறுபான்மையினரைப் பிரித்தே வைத்திருந்தார்கள்?// Very true.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!