அமித் ஷா உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு வலுவான நியாயங்களும் எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானெர்ஜியின் அதீத மமதையும் கிறுக்குத் தனமும் எந்த அளவுக்கு முற்றிப்போய் இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம்! மம்தா வீழ்ச்சியை சந்திக்க 2021 சட்டமன்றத் தேர்தல்கள் வரைகூடக் காத்திருக்கவேண்டாம் போலத் தான் தெரிகிறது.
தமிழக ஊடகங்களுடைய அராஜகமான திரிசமன் வேலைகள் இன்னும் ஓயவில்லை. அதிமுகவுக்கு மந்திரிசபையில் இடம் இல்லை என்பது உண்மையிலேயே இவர்களுடைய கவலையா என்ன? எதையாவது கொளுத்திப் போடவேண்டியது, அது நமத்துப் போனதும் வெட்கமே இல்லாமல் இன்னொன்றைக் கொளுத்திப் போடவேண்டியது Presstitutes என்ற கேவலமான அடைமொழிக்குப் பொருத்தமானவர்கள்தான் இவர்கள்!
ஆனந்த விகடன் உட்பட இங்கே பெரும்பாலான ஊடகங்கள் யோக்கியதை இதுதான்! #ஊடகவிபசாரம்
( துக்ளக் 5-6-2019 இதழின் தலையங்கத்திலிருந்து )
------------------------------------------
தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்தில் நரேந்திர மோடி , - ' நான் டெல்லி கான் மார்க்கெட் கும்பல் ( Khan Market Gang ) உருவாக்கிய தலைவன் அல்ல ' என்று கூறியபோது , பலருக்கு - குறிப்பாக தமிழக மக்களுக்கு அதன் அர்த்தம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.
------------------------------------------
தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்தில் நரேந்திர மோடி , - ' நான் டெல்லி கான் மார்க்கெட் கும்பல் ( Khan Market Gang ) உருவாக்கிய தலைவன் அல்ல ' என்று கூறியபோது , பலருக்கு - குறிப்பாக தமிழக மக்களுக்கு அதன் அர்த்தம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.
டெல்லியில் பத்திரிகைகள், அறிவு ஜீவிகள் , இடைத்தரகர்கள், தொழிலதிபர்களின் பிரதிநிதிகள், முன்னாள் அதிகாரிகளைக் கொண்ட ஒரு கூட்டம்தான் டெல்லியில் பழம் தின்று கொட்டை போடும் கான் மார்க்கெட் கும்பல் என்பது. இந்தக் கும்பலுக்கு 'லட்யன்ஸ் டெல்லி கும்பல் ' என்கிற அடைமொழியும் உண்டு.
புதுடெல்லியை உருவாக்கிய எட்வின் லட்யன் என்கிற ஆங்கிலேய கட்டிட வடிவமைப்பாளரின் பெயரை வைத்து, புதுடெல்லியை லட்யன் தில்லி என்று அழைக்கிறார்கள். அதுவே இந்தக் கும்பலுக்கும் அடைமொழிப் பெயராக இருக்கிறது. உலக மயமாக்கல் காலத்தில் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் , வெளிநாட்டு அரசுகளுக்கும் வக்காலத்து வாங்குபவர்களும் இந்தக் கும்பலில் இணைந்தனர்.
புதுடெல்லியின் மையத்தில் இருக்கும் கான் மார்க்கெட் உணவகங்களில் அமர்ந்து, மணிக்கணக்கில் அரட்டை அடித்து, அக்கப்போர் செய்து, உண்மையும் பொய்யும் கலந்த வதந்திகளைப் பரப்புவதில் நிபுணத்துவம் பெற்றது அந்தக் கும்பல். அது மத்திய அரசுக்கும் , பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் , ஏன் நீதிபதிகளுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ கருத்துக்களை உருவாக்க வல்ல , செல்வாக்கும், அறிவுக்கூர்மையும் கொண்ட கூட்டம் அது.
அந்தக் கும்பல் அக்கப்போர்களையும், வதந்திகளையும் டெல்லியில் உருவாக்கி , அதை செய்தியாக மாற்றி , நாடு முழுதும் பரப்புவதற்கு , அதனுடன் இணைந்த பிரபல பத்திரிக்கையாளர்களை அது பயன்படுத்துகிறது. அவர்களை குஷிப்படுத்தாத யாரும் நிம்மதியாக இருக்க முடியாது.
பிரதமர்களும், அமைச்சர்களும் தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கு அவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அவர்கள் சிபாரிசு செய்பவர்களையும் சந்திக்க வேண்டும். அதைக் கண்டு அஞ்சாத அரசோ, பிரதமரோ, அரசியல் கட்சியோ, தலைவரோ, அதிகாரியோ, ஏன் நீதிபதியோ கூடக் கிடையாது.
லட்யன்ஸ் கும்பலின் வாயில் புகாமல் இருக்கவே அனைவரும் முயற்சிப்பார்கள். இப்படிப்பட்ட வர்க்கத்தை அப்படியே ஓரம் கட்டினார் மோடி. அவர்களுக்கு இருந்த எல்லாச் சலுகைகளையும் நீக்கினார். பெரிய பத்திரிக்கையாளர்கள் கூட்டம் அரசாங்க செலவில் வெளிநாடுகளுக்கு சொகுசுப் பயணம் செல்வதை நிறுத்தினார். அவர்களை சந்திப்பதை அறவே தவிர்த்தார். அதனால் அவர்களின் மவுசு குறைந்தது. ஆத்திரம் அடைந்த அவர்கள் , மோடிக்கு எதிராக நாடு முழுவதும் செய்திகளை பரப்பினர்.
மோடியின் சாதனைகளை மறைத்து, அவரைப் பற்றி அவதூறு கூறி, அங்கும் இங்குமாக நடந்த சிறு சிறு நிகழ்வுகளை பெரிதுபடுத்தினர். நாட்டின் பன்முகத்தன்மை அழிக்கப்பட்டு, அதன் சகிப்புத்தன்மை குறைந்து, மக்களின் அடிப்படை உரிமைகள் பறிபோய் நாடே மாறிவிட்டது என்றெல்லாம் கூறி , மோடியின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முழுவதும் அவர்கள் அக்கப்போர் செய்து வந்தனர். வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து உலக அளவில் நாட்டையே தலைகுனிய வைத்தனர். அந்த லட்யன்ஸ் கும்பலைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள்தான் '2019 தேர்தலில் மோடி தோற்றுவிடுவார் ' என்கிற தோற்றத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தினர்.
எதிர்க்கட்சிகளும் அதை நம்பி , அப்படியே பகற்கனவு கண்டனர். முடிவில் , தோற்றது எதிர்கட்சிகள் மட்டுமல்ல, லட்யன்ஸ் கும்பலும்தான்.
இங்கே தமிழகத்திலும் ஒரு கும்பல் லட்யன்ஸ் கும்பல் மாதிரியே செயல்படுகிறது. கொட்டம் அடக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கிறதா?
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் எந்த ஊரு என்ன சாதி என்றெல்லாம் கேள்விகேட்டு ஒரு சர்ச்சையில் சிக்கினார். இதே மாதிரி சிலவாரங்கள் முன்பு அன்புமணி ராமதாசும், பிரேமலதா விஜய்காந்தும் சிலநிருபர்களுடைய விஷமத்தனமான கேள்விகளை எதிர் கொள்ள வேண்டிவந்தது நினைவிருக்கலாம்.
உண்மையைத் திசைதிருப்பும் ஊடகங்களைக் கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது.
மீண்டும் சந்திப்போம்