பிஜேபி! காங்கிரஸ்! சிவசேனா! திரிணாமுல் காங்கிரஸ்!

எழுத்தாளர் ஜீவி கொஞ்சம் அலுத்துக் கொள்கிறார்! "நீங்களாவது பிஜேபிக்கு தென் மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தைப் பற்றி ஏதாவது எழுதக் கூடாதா?.. எப்பப் பார்த்தாலும் காங்கிரஸ் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பதற்கு ஒரு மாற்றாகவேனும் அமையும்" என்பது அவருடைய சலிப்பு. ஆனால் அப்படிச்செய்ய பிஜேபி பிரதமர் நரேந்திர மோடி இடம் கொடுக்க மாட்டேன் என்கிறாரே! தன் கட்சிக்காரர் தான் MLA தான்! ஆகாஷ் விஜய்வர்கியா! கிரிக்கெட் மட்டையால் அதிகாரிகளைத் தாக்கிய விஷயத்தில் இப்படிச் செய்பவர்கள் யார் மகனாக இருந்தாலும் சரி! கட்சிக்குத் தேவையே இல்லை என்று உடனுக்குடன் கண்டித்து விடுகிறாரே! தவறு செய்தவர்களைக் கண்டிக்காமல், பூசி மெழுகிக் காப்பாற்றுகிற வேலையை எப்போதாவது செய்திருக்கிறாரா? இல்லையே!  அப்புறம் நான் என்ன செய்ய? பிஜேபிக்குத் தென்மாநிலங்களில் வெற்றிடம் என்பதே ஒரு கற்பனைதான் என்றிருக்கையில்  நான் அதைப்பற்றி என்னவென்று எழுதுவது?    


   
பிஜேபியைக் குறை சொல்வதோ தாங்கிப் பிடிப்பதோ இவை இரண்டுமே இல்லாமல் கொஞ்சம் விஷயங்களின் தராதரம், முக்கியத்துவம் இவைகளின் அடிப்படையிலேயே சுதந்திரமாக எழுதிக் கொண்டிருக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறேன்.


மும்பை மக்கள் எது நடந்தாலும் தலைவிதி என்றிருக்கப்  பழகி விட்டார்களென்றோ, நம்மால் என்ன செய்ய முடியும் என்று  கசப்பை விழுங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்களென்றோ நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் ஓட்டுவாங்கிப் பதவிகிடைத்த பிறகு ஜனங்களை நினைத்தே பார்க்காத கூட்டமாக சிவசேனா இருக்கிறது. மும்பை கார்ப்பரேஷன் நிர்வாகம் அவர்களிடம்தான்! இருந்து என்ன பயன்? தகுதியில்லாத நபர்களை நிராகரிக்கத் தெரியாத ஜனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் தாங்கள் என்னவோ பேட்டை சுல்தான்களாகிவிட்டமாதிரி  மக்கள் பிரதிநிதிகள், accountability வரையறுக்கப்படாத தேர்தல்கள் இது என்ன ஜனநாயகம் என்ற கேள்வியை எழுப்புகின்றனவா இல்லையா?  தேர்தல் சீர்திருத்தங்களுக்காகக் குரல் கொடுக்க ஏன் இங்கே எவருக்குமே நேரமிருப்பதில்லை?  

       

நஸ்ரத் ஜஹான் நிஜமாகவே யங் இந்தியாவின் குரலாக மாறி விட்டாரா இல்லையா என்பதை பற்றி அலட்டிக்கொள்ளாமல் இளைய இந்தியாவின் ஒரு குரல் எப்படி கம்பீரமாக ஒலிக்கிறது என்பதைக் கவனியுங்கள்! சுவாரசியமான ஒன்றாக 15வது  நிமிடத்தில் இருந்து ... மம்தா, மோடியைப் பற்றித் தயங்காமல் சொல்லிவிட்டு, ராகுலைப் பற்றிக் கேட்டதும் ம்ஹும் என்று மட்டும் சொல்லிக் கடந்து போகிறார் பாருங்கள்! முழு வீடியோவும் 17 நிமிடங்கள் தான்!     

மீண்டும் சந்திப்போம்.
   

6 comments:

  1. யாருக்கும் சுவாரஸ்யப்படலே போலிருக்கு..

    ReplyDelete
    Replies
    1. ஒரு அக்கப்போர் என்று தலைப்பில் சேர்த்திருந்தால் சுவாரசியம் கொஞ்சம் கூடியிருக்கும்! பக்கப்பார்வைகளும் கூடியிருக்கும் ஜீவி சார்! இதுக்கெல்லாம் அலட்டிக்கலாமா?

      Delete
  2. // பிஜேபிக்குத் தென்மாநிலங்களில் வெற்றிடம் என்பதே ஒரு கற்பனைதான் என்றிருக்கையில் நான் அதைப்பற்றி என்னவென்று எழுதுவது? //

    யாதார்த்த உண்மைகளை கற்பனைகளாக மனத்தில் கொண்டால் தொந்தரவே இல்லை, சார்!
    எல்லோரும் நம்மவரே அல்லது நம்மவராக ஆக்கிக் கொண்டால் போச்சு என்ற பரந்த மனப்பான்மை போலிருக்கு!..

    ReplyDelete
    Replies
    1. இந்த யதார்த்தம் என்கிற வார்த்தைதான் கிடந்து என்ன பாடுபடுகிறது ஜீவி சார்? :-))))

      கொஞ்சம் பொறுத்திருந்து அரசியலை கவனிக்கலாம்!

      Delete
  3. பிஜேபியைக் குறை சொல்வதோ தாங்கிப் பிடிப்பதோ இவை இரண்டுமே இல்லாமல் கொஞ்சம் விஷயங்களின் தராதரம், முக்கியத்துவம் இவைகளின் அடிப்படையிலேயே சுதந்திரமாக எழுதிக் கொண்டிருக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறேன்.

    இது தான். இதே தான். கெட்டியாக பிடித்துக் கொள்ளவும். சில தினங்களுக்கு நண்பர் ஒருவருக்கு உங்கள் தளத்தை பரிந்துரை செய்தேன். எக் காரணம் கொண்டு அவசரம் அவசரமாக உள்ளே வராதே. எனக்கே உள்ளே வந்தால் ஒரு சுற்றி முடித்து வெளியேறும் போது குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகின்றது. அந்த அளவுக்கு தொகுப்பு உள்ளது என்றேன்.

    தொடர்ந்து இதே போல கொண்டு போங்க. நன்றியும் அன்பும்.

    ReplyDelete
    Replies
    1. ஜோதிஜி! நான் ஒரு முன்னாள் இடதுசாரி, இப்போது disenchanted with them என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். நேரடி அரசியலில் நான் இல்லை, என்றாலும் கவனப்படுத்தவேண்டிய விஷயங்களை என் மகனை ஒத்த இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதைத் தாண்டி பதிவுகள் எழுதுவதற்கான வேறு விசேஷமான காரணங்கள் இல்லை.2009இலிருந்து அரசியல் பதிவுகள், அப்போதும் இப்போது எழுதுவது போலத்தான்.

      அதனால் ஒருபக்கச் சார்பாக எழுத வேண்டிய அவசியமும் வராதென்றே நம்புகிறேன். நன்றி ஜோதிஜி!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!