வாழ்க நீ எம்மான்! காந்தி! மதுரைக் கூத்து! நூறுநாள் சாதனை!

இன்று மகாத்மா காந்தியின் 73வது நினைவுதினம். தியாகிகள் தினமாகவும் கொண்டாடப் படுவதில், தியாகிகளையும், காந்தியையும் எப்போதாவது அவசியப்படுகிற போது மட்டும் நினைவுபடுத்திக் கொள்கிற தேசிய வியாதி எப்போதிலிருந்து இங்கே ஆரம்பித்தது?

    அமேசான் தளத்தில் ரூ.49/- விலையில் 

என்னையே எடுத்துக் கொண்டால், மாணவனாக இருந்த நாட்களில் புத்தகங்கள் வழியாக காந்தி எனக்கு அறிமுகமானவராக, நெருக்கமாக இருந்தார். அப்புறம் மார்க்சீயப் பிடிமானம் ஏற்பட்ட நாட்களில், ஏளனத்துக்கு உரிய நபராக இருந்தார். அப்புறம், எப்படி ஜனங்களை வசீகரிக்கிற, கட்டுப்படுத்த முடிந்த ஒரு தலைவராக இருந்தார் என்பதை யோசித்துப் பார்க்கவும், அபிமானம் கொள்ளவும் புத்தகங்களே எனக்குப் பேருதவியாக இருந்தன. எழுத்தாளர் கல்கி மாதிரி எனக்கு மாந்தருக்குள் ஒரு தெய்வமாக காந்தி தரிசனம் தரவில்லையென்றாலும், எத்தனை குறைபாடுகளுடன் இருந்தாலென்ன, என்னுடைய சொந்தப் பாட்டன் மாதிரியானதொரு நெருக்கம் வந்ததில், இன்றைக்கு வாசிப்பதற்காக ஒரு பத்து புத்தகங்களை கிண்டில் தரவிறக்கமாகச் செய்து கொண்டு வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். ( 2 in 1 ஆக வாசிப்புக்கு வாசிப்பும் ஆயிற்று; லேப்டாப்பில் கிண்டில் வாசிப்புக்குத் தயார் செய்து கொண்டது போலவும் ஆயிற்று!) 

எழுத்தாளர் மாலன் நாராயணன் முகநூலில் தன்னுடைய கருத்தாக இப்படிச்சொன்னது கூடப் பலபேருக்கு பிடிக்கவில்லையாம்! ஒரு சாம்பிளுக்கு

மாலன் நாராயணன் இதெல்லாம் வேற லெவல் ...ம்பல் சார்🚶🚶🚶


   
        
        
கோட்ஸே காந்தியைச் சுட்டது கூட மூன்று முறைதான்! ஆனால் காந்தியைப் புரிந்துகொள்ளாதவர்கள் அவரை தினம் தினம் கொன்றுகொண்டே இருக்கிறார்கள் என்பதை ஏனோ மறந்துவிடுகிறோம். அப்புறமென்ன, காந்தியை தூக்கிப்பிடிப்பது? எதற்கு ஜனவரி 30 இல் மட்டும் நினைவுநாள் கொண்டாடுவது? காந்தி பெயரை ஒட்டுவாலாக வைத்திருக்கும் ராகுல் காண்டி கூட காந்தி 150 நிகழ்ச்சியை சாக்குவைத்துத் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டது அந்நிய மண்ணில்தான்!

  
ஜனவரி 30 என்றால் மதுரைக்கு வேறு விதமான சுரம்! சோதனை! பிறந்தநாள் அதுவுமாக இதற்குமேல் பேச வேண்டாமே! வீடியோ 6 நிமிடம்.


ஆளே இல்லாத தியேட்டர்களில் சமீபத்தில் ஒரு தமிழ்ப் படம் 100நாள் ஓடி சாதனை செய்தது மாதிரி இல்லாமல், ஆரம்பித்த நாளிலிருந்து 100 நாட்களைத் தாண்டியும் விறுவிறுப்போ பரபரப்போ குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிற ஒரு விஷயம் #மூலப்பத்திரம்எங்கே மதன் ரவிச்சந்திரன் இந்த ஹாட் டாபிக்கை ஒரு 56 நிமிட விவாதமாக  நடத்திக் காண்பித்துவிட்டார்! கொஞ்சம் பார்க்கலாமே!

மீண்டும் சந்திப்போம்.  

          

ஒரு புதன் கிழமை! தொடரும் கேள்விகள்! பதிலைத் தேடுகிறீர்களா என்ன?

2009 இல் கமல் காசர் உன்னைப்போல் ஒருவன் என்று A Wednesday ஹிந்திப்படத்தை தமிழில் ரீமேக் செய்து எடுத்தபோது இங்கே வலைப்பதிவுகளில் ஏகப்பட்ட நண்பர்கள் பொங்கினார்கள். சொல்லிவைத்துக் கொண்டு செய்த மாதிரி, தங்களுடைய சீற்றத்தை வெளிப்படுத்திய பதிவுகளை டெலிட் செய்த கதை ஒவ்வொரு புதன்கிழமையும் கேள்விகளாக இந்தப் பக்கங்களில் எழுதப்படும் பதிவுகளின் அடிநாதமாக இருக்கிறது. ஆதி காரணமாக இருந்த பத்ரி சேஷாத்திரியும், நேசமுடன் வெங்கடேஷும், அந்த சர்ச்சையைக் கடந்து வெகுதூரம் போய்விட்டார்கள்.

       
ஆனால் அந்தத் திரைப்படம் எழுப்பிய சில அடிப்ப்டைக் கேள்விகளோடு, விடைகளைத் தேடி ஒரு நேர்மையான சுயபரிசோதனை செய்துகொள்ள முடியாத சமூகமாக இன்னமும் நாமிருப்பதை அறிந்திருக்கிறோமா?

இந்திய வரலாற்றில் என்னால் இன்னமும் விளங்கிக் கொள்ள முடியாத விஷயமாக, ஹிந்து முஸ்லிம் divide தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருப்பதற்கு யார் காரணம்? முஸ்லிம் சமுதாயம் ஏன், சிறுபான்மைக் காவலர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சிலரையே இன்னமும் தொடர்ந்து நம்பிக் கொண்டு இருக்கிறது? மதச்சார்பின்மை என்பது பெரும்பான்மை மக்களை வில்லன்களாகச் சித்தரித்து, நாங்கள் மட்டுமே ரட்சகர்கள் என்பதாகக் காட்டிக் கொள்ளும் சிகுலர் காங்கிரஸ், திமுக மாதிரியானவர்களுடைய 
உள்நோக்கங்களை, இத்தனை ஆண்டுகளாகியும் அவர்களால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை?
இப்படித் தொடர் கேள்விகளாக எழுந்து கொண்டே இருப்பதில் #புதன்கிழமைக்கேள்விகள் இன்னமும் அப்படியே இருக்கிறது.மேலே பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற அமைப்பு 73 வங்கிக் கணக்குகளில் 120 கோடி ரூபாய் வரை திரட்டி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்டு வேறு சில மாநிலங்களிலும் நிதியுதவி கொடுத்துப் போராட்டங்களைத் தூண்டுவது குறித்தான விவாதத்தைப் பார்த்தபோது கேள்விகள் அப்படியே இருப்பது புரிந்தது.

உன்னைப்போல் ஒருவன் படத்தின் மீதான பதிவர்கள் சர்ச்சைகளுக்கு முன்னால் தி சா ராஜு எழுதிய ஒரு சிறுகதையை எடுத்துக் கொண்டு பேசிய இந்தப் பதிவில் வந்த பின்னூட்டம், பதில் இது.
  1. இதை நீங்கள் தமிழகத்திலும் காணமுடியும். மெஜாரிட்டியாக இருப்பவர்கள் மைனாரிட்டியாக இருப்பவர்களை புறக்கனிப்பதென்பது பல இடங்களில் காண முடியும். இங்கு மெஜாரிட்டி/மைனாரிட்டி என குறிப்பிடுவது அவர்கள் வாழும் இடங்களில் யார் அதிகம் என்பதை குறிப்பிட. ஒரு சில ஊர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். இந்த வேற்றுமை உணர்வை புறந்தள்ள ஆரம்பப் பள்ளிகளில் தான் அடித்தளம் அமைக்கவேண்டும் என்பது என் எண்ணம். அதற்கு ஆசிரியர்கள் முழு பொறுப்புடன் செயல்படவேண்டும். அப்பொழுதுதான் வரும் தலைமுறைகளில் மாற்றம் காண முடியும். ஒருவர் அடுத்த மதத்தின் கொள்கைகளை ஏற்காமல் இருக்கலாம் ஆனால் வெறுக்காமலும் இருக்கவேண்டும். இது மதத்தை பின்பற்றாதவர்களும் பின்பற்றவேண்டும்.
    ReplyDelete
  2. தமிழகத்திலேயே இதைப் பார்ப்பதினால் தானே, இந்தக் கதையை நினைவில் வைத்துக் கொண்டு இப்போது சொல்கிறேன்! தமிழகத்தில் என்று இல்லை, இங்கே என்னுடன் தாய் பிள்ளையாகப் பழகிய பல நண்பர்களே, இப்போது கொஞ்சம் ஒதுங்கித் தங்களுக்குள் ஒரு கூட்டமாகச் செயல்படுவதைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். இப்போது, அவர்களுக்கு மதமும், நம்பிக்கைகளும் முக்கியமாக ஆகிவிட்டன.

    பேதப் படுத்திபார்ப்பது என்பது என்பது ஒரு பக்கத்தில் மட்டுமே இல்லை. இரண்டு பக்கங்களிலுமே இருக்கிறது என்பது தான் விஷயம். இப்போது கேள்வி, பேதங்களை அகற்றி, இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியும் அதேபோல் இரண்டுபக்கங்களில் இருந்தும் ஆரம்பிக்கவேண்டும்.
    ஆரம்பப் பள்ளியில் இருந்து, ஆசிரியர்களிடமிருந்து என்பதில் தான் எனக்குக் கொஞ்சம் அவநம்பிக்கை எழுகிறது. காரணம், பேதங்களை வளர்ப்பதாகவே இன்றைய கல்விமுறையும், கையாலாகாதவர்களாக ஆசிரியர்களும் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
இங்கே நண்பர் நவாஸுதீன் மாதிரி ஒரு நேர்மையான உரையாடலைத் தொடர, ஒரு சமுதாயமாக அவர்கள் முன்வரும் நாட்களுக்காகக் காத்திருக்கிறோம்.


ஆனால் அப்படி உருப்படியாக எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் அவர்களில் ஒரு பகுதி துடிப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறதே!  

மீண்டும் சந்திப்போம். 

தம்பட்டம் :: அடிப்பதிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டாமா?

இந்தப்பக்கங்களில் Cambridge Analytica முதற்கொண்டு இங்கே பிரசாந்த் கிஷோரின் IPAC நிறுவனம் வரை வெகுஜன அபிப்பிராயங்களை மாற்ற எப்படி வேலை செய்கிறார்கள் என்பதைப் பல பகிர்வுகளில் பார்த்து  இருக்கிறோம். அது நினைவில் இருக்குமானால், First Post தளத்தில் இன்றைக்கு வெளியாகியிருக்கிற Massive tweet volumes, complex hierarchies, coordinated attacks: Hacker reveals how BJP, Congress IT cells wage war on social media  என்று நீரத் பந்தரிபாண்டே எழுதியிருக்கிற செய்திக் கட்டுரையை புரிந்து கொள்ளவும், அதிர்ச்சி இல்லாமல் கடந்துபோகவும் முடியும்! 

 
இப்படிப்படம் போட்டு இதுதான் காங்கிரசின் IT Cell இயங்குகிற விதம் என்று சொன்னால் என்னவென்று புரிந்து கொள்வீர்கள்? உதாரணமாக எனக்கு ட்வீட்டர் கணக்கு இருக்கிறது. காங்கிரஸ், பிஜேபி  புள்ளிகள் என்ன பகிர்கிறார்கள் என்பதை நான் அதிகம் பார்ப்பதும் இல்லை, அவைகளைப் பகிர்ந்து கொள்வதும் இல்லை என்றால் இவர்களுடைய பிரசார யுத்தம் என்ன மாதிரியான விளைவை என்னிடம் உருவாக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? அபிப்பிராயங்களை நானாக யோசித்துத்தான் உருவாக்கிக் கொள்கிறேன் என்ற நிலையில், இவர்கள் என்னதான் தலைகீழாக நின்று முயற்சித்தாலும், என்ன ரிசல்ட்டை கொடுத்துவிடும்? முகநூல் கணக்கும் இருக்கிறது. அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பரவலாக கவனிக்கிறேன், ஆனால் அங்கே எதையும் எழுதுவது இல்லை. ஆனாலும் முகநூல் என்னை வேவு பார்க்கிறது. பிரவுசரில் எதையெல்லாம் தேடினேன், இங்கே பதிவுகள் உட்பட என்னென்ன எழுதினேன் என்பதையெல்லாம் கண்காணித்து, நல்லபிள்ளை மாதிரி suggested pages, suggested friends என்று பல செய்திகளை  முன்னிறுத்தி ஆழம்பார்ப்பதைத் தெரிந்தே வைத்திருக்கிறேன். அதனாலென்ன? நான் பார்க்க வேண்டிய செய்தி எது என்பதை வேண்டுமானால் அவர்கள் முதன்மைப்படுத்தலாம். ஆனால் அவர்கள் என்னுடைய அபிப்பிராயத்தை உருவாக்கவிட நான் அனுமதித்ததே இல்லை என்றால் என்ன செய்வார்கள்?

ஆனால், இப்படி உறுதியாகச் சொல்வதுமே, எந்தச்செய்தியானாலும், அதை   க்ராஸ் செக் செய்யாமல், நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளாமல்,அப்படியே நம்புவதில்லை என்பது இன்று நேற்றல்ல, இளம் வயதிலேயே, கற்றுக்கொண்ட ஒரு விஷயம்! காரணம் நாங்கள் பலவிதமான ஜகஜாலப் புரட்டுகளில் திமுக ஆட்சிக்கு கட்டிலில் அமர்ந்த விதத்தை நேராகப் பார்த்த தலைமுறை! ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், மாணவர்களால் முன்னெடுக்கப் பட்டது, திமுகவின் மொழிப்போர் தியாகிகள் எல்லாம் அதில் பின்னல் வந்து சேர்ந்துகொண்டு, அரசியல் ஆதாயம் அடைந்தவர்கள் என்பதை அந்தநாட்களிலேயே புரிந்துகொள்ளவும் முடிந்தவர்கள். ஆக கடந்த 55 ஆண்டு கால அரசியலைப் பார்த்து வளர்ந்ததில் கிடைத்திருக்கிற அனுபவ பாடம் அது!


ஜனவரி 30 என்றால் உங்களுக்கு உடனடியாக என்ன ஞாபகத்துக்கு வரும்? என்னது? காந்தியை சுட்டுட்டாய்ங்களா? என்று பழைய கதையெல்லாம் சொல்ல வராதீர்கள்! ஜனவரி 30 என்றால் மதுரைக் காரர்களுக்கு அஞ்சாநெஞ்சன் அழகிரி பிறந்த நாள்! பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக அழகிரி விசுவாசிகள் விதவிதமாய் வசனங்களுடன் போஸ்டர் ஒட்டிக் கலக்குவதில் இந்த ஆண்டு கலக்கல் என்ன என்று வேடிக்கைபார்ப்பதே மதுரைவாசிகளுக்கு ஒரு  தனித்துவமான எண்டெர்டெயின்மென்ட் என்றால் நம்புவீர்களா? இந்த ஆண்டு கலக்கல், கொஞ்சம்  கலக்கத்துடன் வந்திருக்கிற மாதிரித்தான் தெரிகிறது!
கலக்கத்திலும் கூட ரைமிங் விட்டுப்போகவில்லை!
                      

ஜம்மு காஷ்மீரில் சொகுசாய் அதிகாரத்தை அனுபவித்த முன்னாள்  முதல்வர்கள் மூவரும் இப்போது வீட்டுச் சிறையிலும் கூட எந்தக் குறையுமில்லாமல் தான் இருக்கிறார்கள்! எப்போதும் மீசைதாடி எதுவும் இல்லாமல் பளபளவென்று ஷேவ் செய்த முகத்துடன் இருக்கிற ஃபரூக் அப்துல்லா, மகன் ஒமர் அப்துல்லா இருவரில் ஒமர் அப்துல்லா மட்டும் நூறுநாட்களைத் தாண்டி ஷேவ் செய்துகொள்ளாமல் சிரித்த முகமாக தாடி மீசையுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியானது. பார்த்துவிட்டு மம்தா பானெர்ஜி, இங்கே இசுடாலின் எல்லோரும் கலங்கினார்களாம்? !!


தமிழக பிஜேபி சார்பில் ஷேவிங் செட்டை ஒமர் அப்துல்லாவுக்கு அனுப்பி ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டிக்கொண்டிருப்பதாக ஒரு செய்தி! சிகுலர் ஆசாமிகள் இதற்கு என்ன சொல்லிப் பொங்கினார்கள் என்பது தெரியவில்லை.  ஒமர் அப்துல்லா மீது தமிழக பிஜேபிக்கு திடீரென்று பாசம் வந்துவிட்டதா என்ன?!
ஓரிரு நாட்களுக்கு முன் காங்கிரஸ்காரர்கள், அரசியல் சாசனப்புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்து பிரதமர் நரேந்திர மோடிக்கு  படித்துப்பாருங்கள் மோடி என்று அனுப்பியதாக செய்தி வந்ததே! நினைவு இருக்கிறதா?  அந்தச் செய்தி கொடுத்த உந்துதலில் தமிழக பிஜேபி இப்படிச் செய்ததோ என்னவோ!!

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ வந்து நிற்கிறதே பதிவு என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் ஒன்றுடன் ஒன்றை சேர்த்துப் பாருங்கள்! தங்கள் ஆட்சியின் சாதனைகளை அழுத்தமாக மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டிய பிஜேபியின் ஐடி செல், அதில் முழுகவனத்தை செலுத்தவிடாமல், காங்கிரஸ் உள்ளிட்ட உதிரிகள் கிளப்புகிற அக்கப்போர்களுக்கு பதில் சொல்வதிலேயே அதிக நேரத்தை செலவிடுகிறது. காங்கிரசின் ஐடி செல்லுக்கு, அதன் தலைவர்களுடைய சாமர்த்தியம் என்னவென்று சொல்லமுடியாதே! அங்கே இங்கே என்று கிடைக்கிற இடங்களில் எல்லாம் கல்லெறிந்து விட்டு ஓடிவிடுவது எளிதல்லவா? அவர்கள் அதைத்தான் செய்கிறார்கள்!

மு.க. அழகிரிக்கு ஐடி விங், செல் எல்லாம் கிடையாது! இப்படிப் போஸ்டர் அடித்து ஒட்டுகிற விசுவாசிகள் மட்டும்தான்! அவர்கள் போஸ்டர் அடித்துக் கலக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்!

நம்மூர் அரசியலின் தரம், வீச்சு இவ்வளவுதான்! The Great Hawk என்றெல்லாம் Netflx படமெடுக்கிற அளவுக்கு இன்னமும் போகவில்லை! நம்மூருக்கு பிரசாந்த் கிஷோர் மாதிரி தேர்தல் உத்தி வகுக்கிற உதார்களே கொஞ்சம் அதிகப்படி! காங்கிரசின் இமேஜை மீட்டு (முட்டுக்) கொடுக்க எண்பதுகளில் Rediffusion என்ற ப்ராண்ட் மேனேஜர்களையும் பார்த்த அனுபவம் வேறு இருக்கிறது. அதுவும் போக, ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே  கட்டமைக்கப்பட்ட  ஈவெரா ப்ராண்ட், ரஜினிகாந்த் என்ற நடிகர் பேச்சிலேயே உடைந்து நொறுங்க ஆரம்பித்ததையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? அப்புறமும் என்ன? !!

மீண்டும் சந்திப்போம்.
            

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் தேசம் என்ன நினைக்கிறதாம்?

இந்தியா டுடே இதழ் வருடத்துக்கொருமுறையோ என்னவோ Mood of The Nation தேசம் என்ன நினைக்கிறது என்ற மாதிரி ஒரு சர்வே எடுத்துப் போடுவதுண்டு! இந்த ஜனவரி 23 அன்று அப்படி ஒரு சர்வே நடத்தி முனகி இருப்பதன் சாரம் இங்கே.  சர்வே முடிவாக Economy and CAA protests hurt, but Narendra Modi's chest size almost intact: Mood of the Nation 2020 என்று இருந்தால் ராஜதீப் சர்தேசாய் முகத்தில் ஈயாடாதா பின்னே? !! 
  

சேகர் குப்தா கூட காங்கிரசுக்கு ஆதரவாகக் கூவும் ஊடகக்காரர் தான்! அவரையே இந்த தேசம் என்ன நினைக்கிறதாம் சர்வே முடிவுகளை விளக்குகிற மாதிரி ஒரு 12 நிமிட வீடியோவில் பார்த்து விடலாம்! என்ன சொல்கிறார் என்பதற்கு நான் விளக்கவுரை தனியாக எழுதப்போவதில்லை! காங்கிரசுக்கு நல்ல சேதி எதுவும் இந்த சர்வே முடிவுகளில் இல்லை! இன்றே தேர்தல் நடந்தால் பிஜேபி+ (NDA) வுக்கு 303 சீட்டுகள். சிவசேனா கழன்று கொண்டதால் மேற்குப்  பகுதியில் 50 இடங்கள் குறையலாம் என்றதற்குப் பின்னாலும் 303 சீட்டுகள்! காங்கிரசின் ஐமுகூ (UPA) வுக்கு அதிகபட்சம் 108 சீட் என்றால், சுவாரசியம் என்ன இருக்குமாம்? 



வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அஸ்ஸாமில் அமைதியை ஏற்படுத்துகிற விதத்தில் போடோ இனத் தீவீரவாதக்குழுக்களுடன் அசாம் அரசு, மத்திய அரசு சார்பில் அமித்ஷா என ஒரு முத்தரப்பு உடன்பாடு  கையெழுத்திடப் பட்டிருப்பதில்  ஜனவரி 30 ஆம் தேதி அன்று சுமார் 1550 போடோ தீவீரவாதிகள் தங்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்து சரணடைவார்கள் என்பது ஒரு நல்ல செய்தி. கொஞ்சம் விரிவாகப் படிக்க இங்கே   

Earlier this month, The Amit Shah led Home Ministry also inked an agreement to end the 22-year-old Bru refugee crisis by facilitating their resettlement in Tripura. The refugees numbering over 34,000 belong to 5,300 families. They were forced to migrate from Mizoram following tribal unrest, back in 1997. ஒரே இந்தியா நியூஸ் தளத்தில் நண்பர் LK என்று நண்பர்கள் வட்டாரத்தில் அழைக்கப்படும் கார்த்திக் லட்சுமிநரசிம்மன், 22 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ப்ரு அகதிகள் பிரச்சினை பற்றி எழுத ஆரம்பித்தார். அவர்களுக்கும் ஒரு விடிவுகாலம் ஜனவரி 16 ஒப்பந்தப் படி பிறந்திருக்கிறது. ஒப்பந்தம், பிரச்சினை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள மேலே சிவப்பெழுத்தில் இருக்கும் சுட்டிகளில் க்ளிக் செய்து வாசிக்கலாம். ஒரு பக்கம் அரசுக்கு எதிராக போராட்டங்கள், வன்முறை எனப் போய்க்கொண்டிருந்தாலும் மத்திய அரசு, நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்ணிருப்போர் பார்க்கட்டும்!   


பானாசீனாவை வழிமொழியவில்லை என்கிற சோகம் சதிஷ் ஆசார்யாவுக்கு! அதற்காக The Wire தளம் மாதிரி, பிஜேபி பக்கம் சாய்கிற மாதிரி சொல்லப் பட்டதற்கே MNS தனிக்கடை நடத்தும் ராஜ் தாக்ரேவுக்கு பிடி சாபமா விட முடியும்? அசோக் சவான் வேறு இன்றைக்கு, உத்தவ் தாக்கரேவிடம் எழுதி வாங்கிக் கொண்ட பிறகுதான் அரசு அமைக்கவே சம்மதித்தார் என்று ஜம்பம் அடித்துக் கொண்டிருக்கிறார். சதீஷ் ஆசார்யா என்னதான் செய்வார்?


ஹிந்துவில் சுரேந்திரா டாம் அண்ட் ஜெரி கார்டூன் மாதிரி ஆம் ஆத்மி கட்சி கோட்டையாக டில்லி இருப்பதாக வரைந்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்.
டில்லியின் மிடில் கிளாஸ் வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சியைக் கைகழுவுகிற  அடையாளம் எதுவும் தென் படவில்லை என்பதென்னவோ நிஜம்!


இங்கே கழகங்களை பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று குறைப்பட்டுக் கொள்ளக் கூடாது இல்லையா? !!
     
   
அமேசான் எழுத்தார்களைப் பற்றிச் சொல்லாவிட்டாலும் கூட சாமிகுத்தம் ஆயிடுமோ? 😎😎 

மீண்டும் சந்திப்போம்.  

ச்சும்மா ஜாலிக்கு! ஒரு புதுப்பட விமரிசனம்! ராஜாவுக்கு செக்!

கடந்த வருடமே வெளியாகியிருக்க வேண்டிய படம் சேரனின் ராஜாவுக்கு செக்! ஜனவரி 24 அன்று திரை அரங்குகளில் வெளியாகி இருக்கிறது. சேரனின் படம் என்பதால், பார்ப்பதில் மனத்தயக்கம் எதுவுமில்லாமல் படத்தைப் பார்த்தேன். பார்த்தபிறகு தான் தெரிந்தது இது சேரன் எழுதி இயக்கிய படமில்லை, சேரன் நடித்திருக்கிற படம் மட்டுமே என்று! சேரன் கொஞ்சம் கூட ஏமாற்றவில்லை! இயக்குனர் சாய் ராஜ்குமார் ஏற்கெனெவே தமிழில் மழை என்ற ஜெயம் ரவி, ஷ்ரியா சரண் நடித்த படத்தை இயக்கியவர்! தயாரிப்பாளர், இசையமைப்பாளர்,  பல நடிகர்கள் தமிழுக்குப் புதிது.

   
ட்ரெய்லரைப் பார்த்தால் ஒரு த்ரில்லர் ரகமாகத் தெரிகிறது இல்லையா? இயக்குனர் இதை ஒரு எமோஷனல் த்ரில்லர் என்று சொல்லிக் கொள்கிறார். படத்தில் சேரன், ராஜா செந்தூர்பாண்டி என்ற போலீஸ் அதிகாரியாக! ஒரு மிக அபூர்வமான, நாட்கணக்கில்  தூங்குகிற ஒரு வியாதி! மனைவி காரணமேதும் சொல்லாமல் விவாகரத்து கோருவதில், வழக்கு 10 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே வந்து, நீதிபதி முன் விசாரணைக்கு வருவதில் இருந்து படம் தொடங்குகிறது. பத்துவருடமாக மகளைப் பிரிந்து இருந்தேன் ஒரு 10 நாள் தன்னுடன் இருக்க ஒப்புக் கொண்டால் விவாகரத்துக்குச் சம்மதிப்பதாக நாயகன் சொல்ல, அடடே! இந்த தகப்பன் மகள் பாசத்தை ஏற்கெனவே பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பின்னிப் பெடல் எடுத்துவிட்டாரே என்று நினைத்தால்,  அங்கே ஒரு திருப்பம்! 


அங்கிருந்து கதைக்களம் இயக்குனர் சொன்ன மாதிரி ஒரு  எமோஷனல் ட்ராக்குடன், ஒரு க்ரைம் த்ரில்லர் ஆகப் பயணிக்க ஆரம்பிக்கிறது. மகள் பத்தாம் நாள் முடிவில், தந்தைக்கு சர்ப்ரைஸாக நான் ஒருவரைக் காதலிக்கிறேன் என்று ஒருவனை அறிமுகப் படுத்துகிற மாதிரி! அங்கே  pause செய்துவிட்டு, சேரன் முந்தைய நாட்களில் ஒரு போலீஸ் அதிகாரியாக, சிறைக்கு அனுப்பிய ஒரு வசதியான இளைஞன் விவகாரத்தை பார்வையாளர்களுக்கு சொல்லிவிட்டு, கதை மேலே நகர்கிறது. மகளைப் பணயமாக வைத்து வில்லன் ஆடுகிற விளையாட்டில் சேரன் எப்படித் தவிக்கிறார்? மகளை மீட்க முடியுமா? இப்படிப் பார்வையாளர்களை சூடேற்றிக் கொண்டே கதை மெல்ல மெல்ல நகர்ந்து சேரன் எப்படி ஜெயிக்கிறார் என்பதோடு முடிகிறது.

V 1 மர்டர் கேஸ் மாதிரியே இதுவும் கூட ஒரு பட்ஜெட் படம்தான்!  எடுக்கப்பட்ட விதத்தை விட, இயக்குனர் தான் சொல்ல விரும்பிய ஒரு மெசேஜை எப்படி உறுத்தாமல், பா ரஞ்சித் மாதிரி பிரசார நெடி  தூக்கலாக இல்லாமல், அளவோடு சொல்லியிருந்தார் என்பதற்காகவே ஒரு விமரிசனமாக எழுதினேன்.

இங்கே இந்தப்படத்தில் இயக்குனர் சமூகத்துக்கு மெசேஜ் எதையும் சொல்லமுற்படவில்லை. தந்தை மகள் பாசப்பிணைப்பு என்று சேரனுக்கு ராசியாகிப் போன ஒரு ட்ராக் ஒருபக்கம்! சேரனால் சிறைக்குப் போன வில்லன் நண்பர்கள் பரிவாரத்தோடு, அதே பாசப் பிணைப்பை வைத்தே, பழிவாங்க முனைகிற ட்ராக்  இன்னொருபக்கம் என்று விரிகிற கதைக்களம். அலுப்புத்தட்டாமல் படம் நகர்வதில் சேரனுக்கு இருக்கிற brand image ஒரு முக்கியமான காரணம்.

படத்தில் பரிச்சயமான முகங்கள் என்று பார்த்தால் சேரனைத் தவிர சப்போர்டிங் ரோலில் ஸ்ருஷ்டி  டாங்கே மற்றும் அந்தநாட்களில் பிரபலமாக இருந்த கனா காணும் காலங்கள் சீரியலில்  நடித்த இர்ஃபான் வில்லனாக, என்று இருவர்தான். சேரனின் மகளாக நடித்திருக்கும் நந்தனா வர்மா தமிழுக்குத்தான் புதிதே தவிர மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிரபலம் தான்! இசையமைப்பாளர் வினோத் யஜமான்யா கூட, அப்படித்தான்! மேலே கடவுளே கடவுளே பாடலைக் கூட இசையமைத்துப் பாடியிருப்பவர் அவர்தான்! பாட்டும் கூடக் கேட்க மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது!

மிகப்பெரிய லாஜிக் சொதப்பல் என்று பார்த்தால், ட்ரெய்லரில் சொல்கிறார்களே, நாட்கணக்கில் தூங்கும் வியாதி என்று, அது வில்லனுக்கு கூடத் தெரிந்து இருக்கிறது! ஆனால் பணியாற்றும் போலீஸ்துறைக்குத் தெரியாதா? எப்படி ஒரு போலீஸ் அதிகாரியாக நீடிக்கிறார் என்றெல்லாம் தமிழ்ப்பட இயக்குநர்களைக் கேள்வி கேட்டுவிட முடியாதே!

சேரனுக்காக, இந்தப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்! அதை இன்னொருமுறை இங்கே அழுத்தமாகப் பதிவு செய்கிறேன்!
  
மீண்டும் சந்திப்போம்.    

பாரத நாடு பழம்பெரும் நாடு! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்!

பாரத நாடு பழம்பெரும் நாடு! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்!  பாரதியின் கவிதை வரிகளோடு நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்! குடியரசு. ஒரு அரசியல் சாசனம் என்று வந்தபின்னால் தான் இந்தியா என்றொரு நாடே உருவான மாதிரியான கூவல்கள் அபசுரமாக அங்கங்கே ஒலிக்க ஆரம்பித்திருப்பதில், பாரத சுதந்திரம் வேண்டிநின்ற மகாகவி பாரதியின் வாக்கை மீண்டும் மீண்டும் ஒரு மந்திரம் போல, சொல்லிச் சொல்லி நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது. 


பாரதம் அன்னியரிடமிருந்து விடுதலைபெற்ற 1947 - அதோடு சேர்ந்து விடுதலை பெற்ற, அதற்குப்பிறகு விடுதலை பெற்ற வேறெந்த நாடும், நம்மைப்போல இன்னும் மக்களாட்சி என்கிற குடியரசாக, கொஞ்ச காலத்துக்கு மேல் நீடிக்க முடியவில்லை என்பதைக் கொஞ்சம் கவனித்தீர்களானால், இந்தியா என்றொரு நாடே ஆங்கிலேயர்களால் ஒன்று சேர்க்கப்பட்ட ஒரு நாடுதான் என்பது எத்தனை பொய்யான பிதற்றல் என்பதும் கூடவே நினைவுக்கு வரும்.

முதல் முறையாக இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்குப் பதிலாக, சென்ற ஆண்டு அதன் பக்கத்திலேயே அமைக்கப்பட்ட போரில் உயிர்த் தியாகம் செய்த முப்படை வீரர்களுக்கான நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். எத்தனையோ தியாகிகள், படை வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து காப்பாற்றிய பாரதநாடு இது.


இந்திய முப்படைகளின் அணிவகுப்பு, நாட்டின் பாதுகாப்பில்  எப்போதும் தயார் நிலையில் இருப்பதை, மிக நன்றாகவே வெளிக்காட்டியிருக்கிறது. வெளியில் இருந்து வரும் எதிரிகளைச் சமாளிக்க நம்முடைய ராணுவம் இருக்கிறது.

ஆனால் உள்ளே இருக்கும் எதிரிகளாக, செல்லரிக்கும் கரையான்களாக இடதுகளோடு காங்கிரசின், கழகங்களின் சமீபகாலப் போக்குகள், போராட்டங்கள் இருப்பதை பொறுப்புள்ள குடிமக்களாகிய நாமல்லவா களையெடுத்து தேசம் காக்க வேண்டும்? நம்முடைய பொறுப்பை உணர்ந்து செயல்படத்  தயாராக இருக்கிறோமா?  

மீண்டும் சந்திப்போம்.   

இட்லி வடை பொங்கல்! #59 தமிழருவி! ரவீந்திரன் துரைசாமி! அர்ஜுன் சம்பத்!

எங்கள் பிளாக் ஸ்ரீராமுக்காக முதலில் ஒரு ஸ்பெஷல் காணொளி! 30 நிமிடம்தான், பொறுமையாகப் பார்க்க முடிந்தால் நான் சுவாசிக்கப்போறேங்க தளத்தில் நேற்று எழுதிய பதிவில் சொன்னதைப் புரிந்துகொள்ள அதுவே உதவியாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்வேன்! நீங்களும் பாருங்களேன்!

  
இது நக்கீரனுக்குத் தமிழருவி மணியன் அளித்த பேட்டி. ரஜனிகாந்த் மீது கழகங்கள் சுமத்துகிற குற்றச்சாட்டு அத்தனைக்கும் பதில் சொல்கிறார். ரஜனி சங்கியோ பிஜேபியோ இல்லை என்றும் சொல்கிறார். அப்படி என்றால் ரஜனிகாந்த் யார்? அதைச் சொன்னாரா? 

தமிழக அரசியல்களம் கொஞ்சம் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமானால் திராவிடங்களின் பிடியில் இருந்து முழுமையாக விடுபட்டே ஆகவேண்டும். அதன் முதல் கட்டமாக விசிக, பாமக, இடதுசாரிகள் திருகல் முகன் காந்தி, வேல்முருகன், சுபவீ செட்டியார் போன்ற பலபத்து உதிரிகளைக் கழித்துக் கட்டியே ஆக வேண்டும் என்பதை நீண்டநாட்களாகவே இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன்.  


அரசியல் விமரிசகர் ரவீந்திரன் துரைசாமி  இந்த 21 நிமிட வீடியோவில் ரஜனிகாந்தை கிறிஸ்தவ, முஸ்லிம் வெறுப்பில்லாத இந்து என்று அடையாளப்படுத்துகிறார் (இங்கே பெரும்பாலான ஹிந்துக்கள் அப்படிப்பட்ட இயல்புள்ளவர்கள் தானே!) என்பதில் இசுடாலினை சிறுபான்மையினர் ஆதரவுக்காக இந்துவிரோதி என்று அடையாளப்படுத்துகிற அவசரம் தான் தெரிகிறது.

Mதமிழ் சேனலில், அந்தநாட்களில் பொதிகை தொலைக் காட்சியில் பார்த்த நிஜந்தன், பதில்களைக் கேட்டுப்பெறுகிற விதத்தில் அதிகம் குறுக்கிடாமல் கேள்விகளை மட்டும் முன்வைக்கிறார். ரவீந்திரன் துரைசாமி ரஜனியைப்பற்றி பேசுவதை விட  இசுடாலின் பற்றிய மதிப்பீட்டையே அதிகம் வைக்கிறார். திமுக அளவுக்கு அதிமுக, ரஜனியைப் பார்த்து பயப்படவில்லை என்றும் சொல்கிறார் என்பதில் ஏகப்பட்ட ஆனால், லாம் களுடன்!  


தமிழருவி மணியன் பேசியதில் இருந்ததை விட. ஏகப்பட்ட IFs and BUTs ரவீந்திரன் துரைசாமி பேச்சில் இருந்ததை கவனித்திருப்பீர்கள்! IFs and BUTs எதுவும் இல்லாமால் இது இப்படித்தான் என்று ஓங்கியடித்துப் பேசுகிறவர் ஒருவரும் வேண்டாமோ? அர்ஜுன் சம்பத் அந்த இடத்தை நிரப்பியிருக்கிறார். வீடியோ 21 mts.
கேள்விகளைக் கேட்பதோடு நிறுத்திக் கொண்டு இடையிடையே குறுக்கிடாமல் பதிலுக்காகக் காத்திருக்கும் நிஜந்தன் உண்மையிலேயே பாராட்டப் படவேண்டிய ஊடகக்காரர் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்வோமா?

மீண்டும் சந்திப்போம்.       
               

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! என்னத்த கேள்வி கேட்டு என்னத்த பதில் சொல்ல?

அரசு என்ன செய்தாலும் அதை எதிர்ப்பது எங்கள் உரிமை, போராட்டம், கலகங்களைத் தூண்டுவது மட்டும் தான் எங்கள் வேலை என்றிருக்கும் இடதுசாரி உதிரிகள் கூட இப்போதெல்லாம் அரசியல் சாசன முகவுரையை மேற்கோள் காட்ட ஆரம்பித்திருக்கிற வினோதத்தைக்  கவனித்திருக்கிறீர்களா? கடமைகள், பொறுப்பு இப்படி எதுவுமே இல்லாமல் உரிமைக்குரல் மட்டும் எழுப்புகிற ஓசிச்சோறு ஆசாமிகளை இந்தியத் திருநாட்டில் தான் பார்க்க முடியும் என்பதை அறிந்து வைத்திருக்கிறீர்களா? எதையும் விளையாட்டாக, லீவு நாள் கொண்டாட்டமாக மட்டுமே போராட்டங்களை நடத்தத் தயாராக இருக்கிற மாணவர்களையும் கெடுத்து, தங்களுடைய அரசியல் அஜெண்டாவை, ஜனநாயக வழிகளில் நடத்தாத திராணியில்லாத காங்கிரசும், இடதுசாரிகளும் கேஜ்ரிவால் போன்ற உதிரிகளும் CAA / NRC / NPR இப்படி எல்லாவற்றையும் எதிர்த்துப் போராட்டங்களை, கலகங்களைத் தூண்டிக் கொண்டே இருப்பதன் பின்னணி என்னவென்றாவது யோசித்துப் பார்த்ததுண்டா?     


CAA / NRC விவகாரங்களைக் குறித்து இந்த 29 நிமிட வீடியோவில் பானு கோம்ஸ் எளிமையாக விளக்குகிறார். கொஞ்சம் கேட்டுத் தான் பார்க்கலாமே! இதன் பின்னணியில் தேர்தல் அரசியல் கணக்குகள் மட்டும் தான் இருக்கிறது என்பதுகூடப் புரியாத அத்தனை அப்பாவியா நீங்கள்? !! 


புதுடில்லியில் ஷாஹீன் பாக் என்ற இடத்தில் CAA / NRC / NPR எதிர்ப்புக்  குரல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறதே! என்ன காரணம் என்பதை PGurus தளத்தில் அட்சய் சந்தர் படம் போட்டே சொல்கிறார்!   
Shift Shaheen Bagh protesters to makeshift camps: Subramanian Swamy to PM Modi - goo.gl/alerts/voG68 #GoogleAlerts
The sit-in has led to long traffic snarls at arterial roads, especially the highway which connects Delhi to Noida, affecting lakhs of commuters
    
இடைஞ்சல் செய்வதொன்றே இந்தப் போராட்டத்தின் நோக்கம்! என்ன செய்ய வேண்டுமென்று டாக்டர் சுப்ரமணியன் சுவாமி வழி சொல்கிறார்! பிஜேபியில் இருந்து கொண்டே டெல்லி தேர்தல்களில் washout ஆக வழிசொல்கிற துணிச்சல் அவருக்கே உண்டானது! 


MNS என்று தனிக்கடை நடத்துகிற ராஜ் தாக்கரே U டர்ன் அடித்து பிஜேபி பக்கம் நெருங்குகிறாராம்! கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவுக்கு வேறு நல்ல யோசனை தெரிந்தால் ராஜ் தாக்கரேவிடம் சொல்லட்டுமே! யார் தடுத்தார்களாம்? !!

  
கார்டூனிஸ்ட்டுகளுக்கும் கூடக் கவிஞர்கள் மாதிரிப் பொய்யிலேயே  படம் வரைய லைசன்ஸ் இருக்கிறதா என்ன? IMF, பணமதிப்பிழப்போடு முடிச்சுப்போட்டு, காங்கிரஸ்காரன் மாதிரியே சொன்னதா என்ன? !!  

இந்தப்பக்கங்களில் திரைப்பட விமரிசனம் என்று மிகக் குறைவாகவே இருக்கும்! காரணம் பெரிதாக எதுவும் இல்லை. ஒரு மாறுதலுக்காக நம்ம வால்பையனோட  சேக்காளி எழுதின திரை விமரிசனம்!  

Evil Skeptic மாதிரியான கான்செப்ட்ட தொட விரும்பற ஒரு கதை கன்வின்சிங்கா சொல்லப்படாமப் போறது ஒரு துரதிர்ஷ்டம் தான்; ஒருகட்டத்துல அதோட நோக்கமே போலித்தனமானதோனு சந்தேகம் வர வெச்சுடுது.
ராட்சசன் அளவுக்கு சைக்கோ மாரலி கரப்ட் கிடையாது. ஆனா வெறும் பொழுதுபோக்கு நோக்கத்தோட எடுக்கப்பட்ட ராட்சசன்ல கூட வில்லனுடைய தோள் மேல ஆடியன்ஸ் பயணிக்கல; கதை நெடுக சுவாரசியத்துக்குத் தேவையான பதட்டத்தக் கடத்துச்சு. ஆனா இதுல உள்ள நமத்துப்போன லாஜிக்குகளும் & சோதாவான கேரக்டர்களும் சைக்கோவோட கொலைகளப் பாத்து ஆடியன்ஸ் கைதட்ற நிலைமைய உண்டாக்கிடுது.
சைக்கோ/ சோசியோபாத்களுக்கு கண்டிப்பா ஒரு மோசமான குழந்தைப் பருவம் இருக்கணும்ன்ற பலவீனமான ஐடியாவ மிஷ்கினும் தூக்கிட்டு வருவாப்டினு எதிர்பாக்கல. சைக்கோலருந்து இளையராஜாவ கழிச்சுட்டு பாத்தா நடுநிசி நாய்கள் தான் மீதி இருக்கும்.  

விமரிசனத்தைப் படிப்பதற்கு முன்னாலேயே, இதைப் பார்ப்பதைத் தவிர்க்கத்தான் நினைத்திருந்தேன்! விமரிசனம் பார்த்தபிறகு....... எண்ணம் உறுதியானது.

இங்கே கேள்விமேல் கேள்வியாக இருப்பதற்கு, யாரேனும் வந்து பதில்சொல்வார்கள் என்ற நப்பாசை கூடத்தான் இல்லை! அதுக்கென்னவாம் இப்போ? !!

மீண்டும் சந்திப்போம்.        
  

கொஞ்சம் கொறிக்க! சின்னச் சின்னதாய் #அரசியல்

சீரியசாக அரசியல் எழுதினால் படிக்க அலுப்பாக இருக்கிறதோ?அதற்காக காமெடி, சினிமா, இலக்கியம், புத்தகம் என்று எழுதினால் மட்டும் பதிவை வாசிக்கக் கூட்டம் அள்ளுதோ என்று மனசுக்குள் நான் மட்டுமே முனகிக் கொள்ள வேண்டியதுதானா? தமிழில் வலைப்பதிவுகள்  திரட்டி எதுவும்  தற்சமயம் இயங்காமல் இருப்பதில் ஏகப்பட்ட முகநூல், அமேசான் எழுத்தாளர்கள் உருவாகிவிட்ட விபரீதத்தை யாரும் இங்கே கவனிக்கவில்லை போல! இன்றைக்கு கொறிக்கிற மாதிரி சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் அரசியல் செய்திகள்!


முதலில் ஒரு காமெடி! உ.நிதி உபயம்   

வரலாறு என்றால் முரசொலியில் வருகிற செய்திகள் மாதிரித்தான் என்று நினைத்துவிட்டார் போல! படமாக எடுத்தால் எக்கச்சக்கமான பலான விஷயங்களையும் சொல்ல வேண்டிவருமே! அவை இல்லாமல் வரலாறு முழுமை பெறாதே! ஆனால் சென்சாருக்குத் தப்புமா?

   
இப்படி நிஜமாகவே உளறிக்கொட்டி விடுவோமென்று பயந்துதான் கமல் காசர் இப்போது வரை ஈவெரா சர்ச்சையில் கருத்து எதுவும் சொல்லாமல் வாய்மூடி இருக்கிறாரோ?

  
மக்கள் நீதி மய்யம் /கமல் காசர் ஜனவரி 9 அன்று ரஜனி தமிழ்நாட்டுக்கு உதவவேண்டும் என்று சொன்னதற்கு ரஜனிகாந்த் துக்ளக் ஆண்டுவிழாவில் பேசியது, அதை மறுபடியும் நான் ஆதாரத்தோடுதான் பேசினேன். வருத்தமோ மன்னிப்போ கேட்கமாட்டேன் என்று உறுதி செய்து பேசியது என அடுத்தடுத்து 12 நாள் இடைவெளியில் தமிழ்நாட்டுக்கு மிகவும் உதவுகிற மாதிரி ஒரு விஷயத்தைப் பேசுபொருளாக்கி விட்டார்!

   
துக்ளக் 50 வருடங்களுக்கு முன்னால் கருணாநிதிக்கு எப்படி நன்றி சொன்னதோ, அதேபோல இப்போது யாருக்கு நன்றி சொல்வது? !. ஓசிச்சோறு வீரமணி 2. சுபவீ  செட்டியார் 3. திருமாவளவன் 4. அமைச்சர் ஜெயகுமார்  இப்படி பட்டியலில் உதிரிகள் எண்ணிக்கை நீளுகிறது. உங்கள் சாய்ஸ் யார்?


தந்திடிவி மிகவும் எச்சரிக்கையோடு ரஜனிகாந்த் பேச்சு அதற்கான எதிர்வினைகள் குறித்த விவாதங்களை நடத்திவருவது காலத்தின் கோலம்! தலைப்பே ரஜனியைச் சுற்றும் பெரியார் அரசியல்: அடுத்து என்ன ... இப்படிக் கேள்விக்குறி கூட இல்லாமல்! அசோகவர்ஷினி இந்த 50 நிமிட விவாதத்தை நடத்தியது கொஞ்சம் பரவாயில்லையே ரகம்!

தந்தி டிவி கொளத்தூர் மணி :அன்று கோர்ட்டில் ஜட்ஜ் , சுதந்திரத்துக்கு போராடிய ஈவேராவை கொச்சை படுத்தாதீர்கள் என்று சொல்லி இருக்கிறார் KT ராகவன்:சுதந்திரமே வேண்டாம்னு சொன்னவர் தான் உங்க ஈவேரா சுதந்திர தினத்தை கருப்பு தினம்னு சொல்லிருக்காரு கொஞ்சமாவது வரலாறு தெரிஞ்சிட்டு பேச வாங்க
😆

மீண்டும் சந்திப்போம்.