திராவிடப்பொய்கள்! ரங்கராஜ் பாண்டே! நட்டநடு சென்டர்!

திராவிடங்களுடைய வெற்றியே அவர்களுடைய பொய், புளுகு, பித்தலாட்டங்களில் ஜனங்களைத் தொடர்ந்து முட்டாள்களாக வைத்திருப்பதில் தான் இருக்கிறது. இன்னும் இது புரியாமல் இருப்பவர்களுக்காக மாரிதாஸ் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். திமுகவின் பொய்யும் புளுகும் என்னென்ன என்று ஒவொன்றாக விளக்குகிறார்.

   
இங்கே புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளைக் கலகக் கும்பல் என்று சொல்லி விட்டாராம்! அங்கலாய்த்துக் கொள்கிறார். சரி, இங்கே கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணிவைத்துத் தொங்கிக்கொண்டிருக்கிறதே திமுக, அதன் தலைவர் இசுடாலின் முதல்வர் எடப்பாடியைக் குறித்தும் இவர்களிடமிருந்து நழுவி அதிமுக கூட்டணிக்குப் போய் விட்ட சில கட்சித்தலைவர்களைப்பற்றியும் கேவலமாகப் பேசுகிறாரே, அதற்கென்ன சொல்வாராம்?

          
எல்லாவற்றையும் விட அருணன் முன்வைக்கிற கருத்து (பிஜேபி, காங்கிரஸ்) இரண்டும் மாறிமாறி ஆட்சிக்கு வரட்டுமே! கேரளா ஒன்றில் தான் சேட்டன்மார் அப்படி மாறிமாறி வாக்களிக்கிறார்கள்! என்ன மாதிரியான வாதம் இது? சீமாறு சீறியதுபோல மெய்யாலுமே இந்த மனிதர் லூசு தானோ?


ஜிஎஸ்டி குறித்து திமுக காங்கிரஸ் கூட்டாளிகள் தொடர்ந்து விஷமத்தனமாகப் பிரசாரம் செய்வதைக் குறித்து முகநூலில் நண்பர் ராஜசங்கர் எழுப்பியிருக்கிற நியாயமான கேள்வி இது! 


திமுக அதிமுக அணிகளுக்கிடையில் நடக்கும் போட்டா போட்டியில் ஆட்டையைக் கலைக்கிற சக்திகளாக இந்தத் தேர்தலில் தினகரனின் அமமுக, கமல் காசரின் மக்கள் நீதி மய்யம் மற்றும் சீமாறு நடததும் நாம் தமிழர் கட்சி மூன்றும் இருக்கக் கூடும் என்பது தெரிந்த விஷயம்தான்! ஆனால் இதை நான் சொல்வதைவிட, ரங்கராஜ் பாண்டே மாதிரி ஊரறிந்த ஊடகக்காரர் சொல்லும்போது, செய்திக்கு கூடுதல் மதிப்பும் கவனிப்பும் கிடைக்கிறதா இல்லையா?

  
தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் ஏதோ ஒருவித சிக்கல் எழுவது இயல்புதான்! இந்தத் தேர்தலில் இசுடாலின் வகையறாவுக்கு இப்படி ஒரு சிக்கலாம்!  

கொஞ்சநாட்களாக பதிவுலகத்தில் புழக்கமற்றுப் போன வார்த்தை #நட்டநடுசென்டர் கூட்டணி அரசியலில் அப்படி யார் இருப்பார்கள்/இருக்கிறார்கள்?


மீண்டும் சந்திப்போம்!                 

1 comment:

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!