சசிதரூர்! நிர்மலா சீதாராமன்! அரசியல்களம்!

பல முகநூல் பக்கங்களில் நேற்றைக்கு கடவுள் இருக்காண்டா கொமாரு என்று சசிதரூர் துலாபாரம் காணிக்கை செலுத்தச் சென்ற இடத்தில் தராசு தலையில் விழுந்து  அடிபட்டு மருத்துவ மனையில் ஆறு தையல்கள் போடுகிற அளவுக்குப் போனதைக் கிண்டல் செய்த பதிவுகளாகப் பார்த்து முகம் சுளிக்கிற மாதிரி ஆனது. கேரளாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மருத்துவ மனைக்கு நேரில் வந்து சசிதரூரை நலம் விசாரித்திருக்கிறார் என்ற செய்தி ஆறுதலாக மட்டுமல்ல, பிஜேபி உண்மையிலேயே ஒரு வித்தியாசமான கட்சிதான் என்பதையும் சேர்த்தே சொல்லியிருக்கிறது.

Touched by the gesture of , who dropped by today morning to visit me in the hospital, amid her hectic electioneering in Kerala. Civility is a rare virtue in Indian politics - great to see her practice it by example!
ட்வீட்டரில் நெகிழ்ந்திருக்கிறார் சசிதரூர்! நானும்தான்!  
இதற்கெல்லாம் பதில் இருக்கா...? தமிழகம் கேட்கிறது ஸ்டாலின்! இங்கே பல முக்கியமான கேள்விகளை திமுக தலீவர் இசுடாலின் முன் வைக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒரு பகுதி:
உங்கள் நிலைப்பாடு என்ன?
'பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருக்கும் தமிழக முதல்வர், மேகதாது அணை கட்டுவதை கைவிடும் நிபந்தனையை, பா.ஜ.விடம் வைத்திருக்கிறாரா' என கேட்கிறீர்களே... உங்கள் கூட்டணியில் இருக்கும் காங்., தயவில் தானே, கர்நாடகாவில் ஆட்சி நடக்கிறது. இப்படி ஒரு நிபந்தனையை, காங்.,கிடம் நீங்கள் வைத்திருக்கிறீர்களா? 'கடந்த, 2014ல், பா.ஜ., ஆட்சிக்கு வந்தபோது, 18 ஆயிரம் கிராமங்கள் இருளில் தான் இருந்தன. நாங்கள் தான் ஆட்சிக்கு வந்த, 1,000 நாட்களில் இருளுக்கு வெளிச்சம் பாய்ச்சினோம்' என்கிறார் மோடி.இதற்கு, நீங்கள் ஆதாரத்துடன் மறுப்பு தெரிவிப்பீர்களா?

நாகர்கோவில் பிரசார பொதுக்கூட்டத்தில், 'சில வாரங்களில், நாட்டின் பிரதமராக ராகுல் பதவி ஏற்பார். அதன்பின், அவரது கரங்களில் இந்தியா பாதுகாப்பாக, ஆரோக்கியமாக, மதசார்பற்றதாக இருக்கும்' என்றீர்களே; அப்படி ஓர் ஆட்சியை ராகுல் தருவார் என்பதை, அவரது எந்த செயல்பாட்டின் அடிப்படையில் சொன்னீர்கள்; ஒருவேளை, அப்படி ஓர் ஆட்சியை அவர் தரவில்லை எனில், உங்கள் நிலைப்பாடு என்ன? 

தொகுதி பங்கீடு பேச்சு நேரத்தில், காங்., தயவில் கர்நாடகத்தில் முதல்வராக இருக்கும் குமாரசாமி, பிரதமர் மோடியை சந்திக்கிறார். 'என்ன இந்த நேரத்தில்...' எனக் கேட்டதற்கு, 'கர்நாடக வறட்சிக்கு நிவாரணமாக, 11 ஆயிரம் கோடி ரூபாய் கேட்க வந்தேன்' என்றார். ஆனால், அவர் கேட்டது, கிடைத்ததாக செய்தியில்லை; அப்படியென்றால், அவர் கேட்கப் போனது அதுவல்ல; சரிதானே; சரி... நீங்கள் சொல்லுங்கள், தேர்தலுக்குப் பின், பா.ஜ., பக்கம் சாய்வீர்களா; மாட்டீர்களா?
'ஆமாமா, இல்லையா?
'எதிர்க்கட்சி துணை தலைவர், கட்சி பொருளாளர், 40 ஆண்டுகளாக சட்டசபையில் இருப்பவர், 80 வயதை கடந்தவர் என்றும் பாராமல், வருமான வரித் துறையினர் வந்தனர்' என, உங்கள் துரைமுருகன் வருந்தினார். அப்போது, 'இந்த அனுபவத்திற்கும், வருமான வரித் துறையின் நடவடிக்கை கூடாது என்பதற்கும் என்ன தொடர்பு' என, நீங்கள் சிந்தித்தீர்களா?   
இணைப்பில் முழுச்செய்தியைப் பாருங்கள்! கேள்விகளில் நியாயம் இருக்கிறதா இல்லையா? திமுகவின் இரட்டைநிலைபாடு, காங்கிரஸ் பக்கம் சாய்ந்தது, எல்லாவற்றையும் விட தேர்தலுக்குப்பின் காங்கிரசைக் கைகழுவி விட்டு பிஜேபி பக்கம் சாயமாட்டார் என்பதற்கு உத்தரவாதம் தருவாரா? பதில் வராது என்றால் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?   
அவருக்கு நமது கேள்வி..தமிழ் மண்ணிலே தமிழர்களால் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டாரே ..அப்படி என்றால் தமிழ் மக்கள் எல்லாம் ராஜிவ் காந்தி மீது கொலை வெறியில் இருந்தார்கள் என்று சொல்லலாமா?
இந்திரா காந்தி சீக்கிய ராணுவ வீரனால் கொல்லப்பட்டாரே ..அப்படி என்றால் சீக்கியர்கள் எல்லாம் இந்திராகாந்தி மீது கொலை வெறியில் இருந்தார்கள் என்று சொல்லலாமா?
கேவலமான அரசியல் ஒரு மனிதனை எவ்வளவு மி ருக குணம் உடையவனாக மாற்றுகிறது.ஒரு முதியவரின் கொலையில் கூட அரசியல் சந்தோசம் கொள்ள செய்கிறது..வேதனை..
திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதே தேசம் காக்கும் ஒரே வழி!
 

2 comments:

  1. திமுக எப்போதும் ரவுடிகளின் கூடாரம். அராஜகக் கட்சி. அதுமட்டுமல்ல... அவர்கள் மற்றவர்களின் நிலங்களை வீடுகளை வளைப்பதில் வல்லவர்கள். இன்று திமுகவை ஆதரிப்பவர்களுக்கு அவர்கள் சொத்து பறிபோகும்போது, தெரிந்தும் பாம்புக்குப் பால்வார்த்தோமே என்பது புரியும்

    ReplyDelete
    Replies
    1. ஜனங்களுக்கு அரைகுறையாகவாவது திமுகவின் வண்டவாளங்கள் தெரியும் என்றாலும், ஒரு மந்தைத்தனமான மனோநிலையிலேயே இதுவரை ஜெயிக்கிற கட்சி என்று பரவலாகச் சொல்லப்பட்ட கட்சிக்கே வாக்களித்து வந்தார்கள். அதனால்தான் இப்போதும் கூட ஊடகத்தம்பட்டங்கள் திமுகவுக்கு அனுசரணையாகவே விலைக்குவாங்கப்பட்டாலும், அந்த நிலைமை இனிமேல் மாறும், பழைய கணக்குகள் எடுபடாது என்றுதான் தோன்றுகிறது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!